தோற்றுப்போன அரசியல்வாதிகளான விமல் வீரவன்ச (Wimal Weerawansa) மற்றும் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksha) ஆகியோர் தற்போது தமிழ் மக்களின் நினைவேந்தல்களை அரசியலாக்குவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“நினைவேந்தல் நிகழ்வுகள் இலங்கையில் முதல் தடவையாக நடப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை தோற்றுப்போன அரசியல்வாதிகள் உருவாக்குகின்றனர்.
ஆனால், மக்கள் இந்த நினைவேந்தல்களை ஒவ்வொரு வருடமும் செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் இந்த நினைவேந்தல்களை நிறுத்த பல கைது நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் மக்கள் இதனை ஒவ்வொரு ஆண்டும் நடாத்துகின்றனர்.
எனவே, இது ஒரு புதிய விடயம் அல்ல. மக்களுக்கு அவர்களின் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூர முழு உரிமையும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,