தாயின் இறுதிகிரியைக்கு தாயகம் வந்த பிரித்தானிய வாழ் தமிழருக்கு காத்திருந்த சோதனை!
இலங்கை வந்த பிரித்தானிய வாழ் புலம்பெயர் தமிழ் கைதானது தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைதான புலம்பெயர் தமிழர் , யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் மரணமான தனது தாயாரின் இறுதிக் கிரிகைகைக்காக நாட்டுக்கு வருகை வந்ததாகத் தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய்வருகையில்,
தாயின் இறுதிகிரியைக்கு தாயகம் வந்த பிரித்தானிய வாழ் தமிழருக்கு காத்திருந்த சோதனை! | Arrest Of A British Based Tamil Diaspora Colombo
நிதி திரட்டியதாக குற்றம்
நேற்று முன் தினம்(30) நாட்டுக்கு வருகை தந்த கிளிநொச்சியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மீண்டும் கடவுச்சீட்டுக்கு தட்டுப்பாடா?
மீண்டும் கடவுச்சீட்டுக்கு தட்டுப்பாடா?
கைதான புலம் பெயர் தமிழருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றினால் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, உருத்திரபுரத்தைச் சேர்ந்த சங்கர் விஜயசுந்தரம் என அடையாளம் காணப்பட்ட 43 வயதுடைய நபர், நவம்பர் 30 ஆம் திகதி பாரிஸில் இருந்து வந்திறங்கிய போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
தாயின் இறுதிகிரியைக்கு தாயகம் வந்த பிரித்தானிய வாழ் தமிழருக்கு காத்திருந்த சோதனை! | Arrest Of A British Based Tamil Diaspora Colombo
பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மனிதர்களின் மரண திகதியை குறிக்கும் AI ஆப்; பேசுபொருளாகும் மரணக் கடிகாரம்!
மனிதர்களின் மரண திகதியை குறிக்கும் AI ஆப்; பேசுபொருளாகும் மரணக் கடிகாரம்!
கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து தப்பிச் சென்று பிரித்தானியக் குடியுரிமை பெற்ற விஜயசுந்தரம், இலங்கையில் இயங்கிவரும் பயங்கரவாத அமைப்புக்கு ஐக்கிய இராச்சியத்தில் நிதி திரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
சூப்பர் சிங்கர் ஜூனியரில் அசத்த வரும் யாழ்ப்பாண சிறுமி!
சூப்பர் சிங்கர் ஜூனியரில் அசத்த வரும் யாழ்ப்பாண சிறுமி!
நீதிமன்றத்தினால் பயணத் தடை
கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் உள்ள அமைப்பின் உறுப்பினர்களுக்கு இந்த நிதி விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொழும்பு குற்றப்பிரிவு (CCD) இவருடைய செயற்பாடுகள் தொடர்பாக முறைப்பாடுகளைப் பெற்று, 2012 மே 31ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் இந்த விடயத்தை அறிக்கை செய்தது.
பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி திருத்தம்!
பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி திருத்தம்!
இதனையடுத்து, அவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பயணத் தடை விதிக்கப்பட்டது. இந்த பயணத் தடையை அறியாத சந்தேக நபர் இலங்கை திரும்பியதால் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
தாயின் இறுதிகிரியைக்கு தாயகம் வந்த பிரித்தானிய வாழ் தமிழருக்கு காத்திருந்த சோதனை! | Arrest Of A British Based Tamil Diaspora Colombo
அவர் தடுத்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, கொழும்பு குற்றப்பிரிவினர் கைதான புலம்பெயர் தமிழரை காவலில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் தாயின் இறுதிகிரிஜைக்காக வருகை தந்தவர் கைதான சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.