கனடாவில் (Canada) இனி புகலிடக் கோரிக்கை பெறுவது என்பது எளிதல்ல என கனேடிய அரசாங்கம் உலகளாவிய எச்சரிக்கை விளம்பரம் ஒன்றை விடுத்துள்ளது.

சுமார் 178,662 அமெரிக்க டொலர்கள் செலவில் தமிழ், இந்தி, உருது மற்றும் ஸ்பேனிஷ் உட்பட 11 மொழிகளில் இந்த எச்சரிக்கை விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்நடவடிக்கை கனேடிய மக்களிடையே செல்வாக்கு குறைந்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அரசாங்கத்தின், அரசியல் தந்திரம் என ஒரு சில தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

புலம்பெயர் மக்கள்

குறித்த விளம்பரத்தில், கனடாவில் இனி புகலிடம் கோருவது எளிதல்ல அத்தோடு தகுதி பெற கடுமையான வழிமுறைகள் உள்ளன. முடிவெடுக்கும் முன்னர் அவை குறித்து நன்கு தெரிந்துகொள்ளுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் உட்பட 11 மொழிகளில் வெளியான விளம்பரம் : கனடா அரசின் அதிரடி அறிவிப்பு | Government Announcement On Asylum Claims In Canada

பொதுவாகவே, புலம்பெயர் மக்களுக்கு வாய்ப்புக்களை அதிகம் வழங்கி வரும் கனேடிய அரசாங்கம், தற்போது அந்த எண்ணிக்கையை குறைத்துள்ளதுடன், டொனால்ட் ட்ரம்பினால் அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு தற்காலிகமாக குடியேறும் மக்களையும் தடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *