சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கிற்கான முக்கிய சுற்றுப்பயணத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மேற்கொண்டுள்ளார்.

சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் சிரியாவின் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான உள்ளக செயல்முறை தொடர்பில் விடுக்கப்பட்ட அழைப்பை தொடர்ந்தே அவர் இந்த விஜயத்தை ஜோர்தானுக்கு மேற்கொண்டுள்ளார்.

இதில் துருக்கிய மன்னரை விசேடமான சந்தித்து  கலந்துரையாடவுள்ளார்.

ஐந்து தசாப்தகால ஆட்சி

முன்னதாக அல்-கொய்தாவுடன் இணைந்த ஒரு குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையிலான எதிர்ப்புப் படைகளின் தாக்குதல் ஆரம்பித்த  சில நாட்களுக்குப் பிறகு, தொடங்கப்பட்ட அல் – அசாத் குடும்பத்தின் ஐந்து தசாப்தகால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து சிரிய மக்கள் புதிய ஆட்சிக்கு வழிவகுத்துள்ளனர்.

அமெரிக்க தலையீட்டுடன் சிரியாவில் புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சி! | Us Envoy Visits Middle East Antony Blinken

இந்நிலையில் சிரியாவில் அமெரிக்க குடிமக்களை நாட்டிலிருந்து வெளியேற்றி தனது நாட்டுக்கு அழைத்து வர அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.

அதன் காரணமாக அங்கு அவர் சிரியாவின் நிலைமை குறித்து விவாதிக்க கூட்டங்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *