முள்ளிவாய்க்கால்(Mullivaikkal) நினைவு முற்றத்தில் பேரவலத்தின் சாட்சியாக, நினைவாலயம் ஒன்று அமைக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்(T. Raviharan) வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றையதினம் (17) சர்வதேச இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“2024 நவம்பர் 27ஆம் நாளில் எமது மக்கள் தங்களின் உறவுகளுக்கு எதுவித இடர்பாடுமின்றி, அமைதியாக தமது அஞ்சலிகளைச் செலுத்தி தமது உணர்வலைகளை வெளிப்படுத்தி ஆறுதலடைந்தனர். அந்தவகையில் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டிற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

முள்ளிவாய்க்கால் நினைவாலயம் 

இலங்கைத்தீவில் காலங்காலமாக தொடர் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழர்கள், 2009இல் இடம்பெற்ற இறுதிப்போரில் வார்த்தைகளில் கூற முடியாத துன்பத்தை அனுபவித்து இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டனர்.

பேரவலத்தின் சாட்சியாக முள்ளிவாய்க்கால் நினைவாலயம்: ரவிகரன் எம்.பி வலியுறுத்து | Mp Ravikaran Urges Mullivaikkal Memorial

இந்தநிலையில், அங்கு உறவுகளை இழந்து, தற்போது வாழ்ந்துவருகின்ற மக்கள் தம் உறவுகளை நினைவுகூர்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு நினைவிடம் தேவை என்பதை அங்குள்ள மக்கள் ஆதங்கத்துடன் கூறிவருகின்றனர்.

படுகொலைசெய்யப்பட்ட எம் உறவுகளை நினைவுகூர ஒரு நினைவாலயம் அமைக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகின்றது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவாகக் கட்டப்படும் ஆலயத்தில் உயிரிழந்தோரின் பெயர்கள் பொறிக்கப்படுவது தத்தமது உறவுகளை காலாகாலத்திற்கும் அவர்களின் சந்ததிகள் நினைவுகூர வசதியாக இருக்கும்.

ரவிகரன் எம்.பி

அந்தவகையில் தேசிய பேரவலத்தின் சாட்சியாக நினைவு ஆலயம் முள்ளிவாய்க்காலில் மே -18 நினைவுகூருமிடத்தில் அமைக்கப்படவேண்டும். இறந்தவர்களை நாங்கள் அடக்கம் செய்யும்போது கல்லறைகளை அதன்மேல் அமைக்கின்றோம்.

பேரவலத்தின் சாட்சியாக முள்ளிவாய்க்கால் நினைவாலயம்: ரவிகரன் எம்.பி வலியுறுத்து | Mp Ravikaran Urges Mullivaikkal Memorial

அந்தக்கல்லறைகளில் சம்பந்தப்பட்ட உறவுகள், நினைவுதினங்களில் பால்தெளித்து, படையல்களைப் படைத்து, பூக்கள் சொரிந்து, தீபங்கள் ஏற்றி தங்களுடைய மனக்கவலையை உள்ளத்திலிருந்து வெளிப்படுத்தி அழுது ஆற்றுகின்ற அந்த நிலைக்கு எமது மக்களையும் ஈடுபடுவதற்கு ஒரு நினைவாலயத்தை அமைப்பதற்கு எமது மக்களுக்கு அனுமதிதாருங்கள்.

இனப்பாகுபாடு பாராது, நாம் முள்ளிவாய்க்காலில் ஓர் நினைவாலயம் அமைப்பதற்கு அனுமதிதாருங்கள் எனக் கேட்டுக்கொள்கின்றேன்”என்றார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *