தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகித் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் 62 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. தாய்லாந்திலிருந்து திரும்பிய ஜெஜு ஏர் நிறுவனத்தின் விமானம், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
175 பயணிகள், 6 விமானப் பணியாளர்களுடன் சென்ற விமானமே விபத்துக்குள்ளானது.
முதலாம் இணைப்பு
தென் கொரியாவில் (South Korea) உள்ள விமான நிலையத்தில் 181 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கபடுகிறது.
175 பயணிகள் மற்றும் 6 விமானப் பணிப்பெண்களை ஏற்றிச் சென்ற ஜெஜு ஏர் விமானம் தாய்லாந்தில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்ததாகவும், தரையிறங்கும் போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
