இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என இலங்கைக்கான சீன தூதுவர் குயி சேகன்ஹோங் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சீன நாட்டு அரசாங்கத்தின் நிவாரணப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண ஆளுனர் இலங்கைக்கான சீன தூதுவரிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த நிவாரணம் வழங்கிவைக்கப்பட்டன.

இலங்கைக்கான உதவிகளை தொடர்ந்து வழங்கும் சீன அரசு | Chinese Government Continues Assistance Sri Lanka

இந்த நிகழ்வு மட்டக்களப்பு திராய்மடுவில் உள்ள புதிய மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான சீன தூதுவர் குயி சேகன்ஹோங் கலந்துகொண்துடன் சீனதூதரகத்தின் பிரதம அரசியல் பிரிவிற்கான அதிகாரி குயின் லிஹோன்,மேலதிக அரசாங்க அதிபர்களான சிறிக்காந்த், முகுந்தன் மற்றும் தூதரக அதிகாரிகள்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 770 குடும்பங்களுக்கான நிவாரண பொருட்கள் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்கிவைக்கப்பட்டன.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *