யாழ்ப்பாணத்தில் தனது மகளை ரியூசனுக்கு அழைத்துச் செல்ல முயன்ற தந்தை திடீரென உயிரிழப்பு!யாழ்ப்பாணத்தில் தனது மகளை தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த தந்தை ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் யாழ். ஊரெழு பகுதியைச் சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த குடும்பஸ்தர் நேற்றையதினம் (30-12-2024) காலை மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு மோட்டார் சைக்கிளை எடுத்துள்ளார்.

இதன்போது அவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு வந்து கதிரையில் இருந்தவேளை மயக்கடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தனது மகளை ரியூசனுக்கு அழைத்துச் செல்ல முயன்ற தந்தை திடீரென உயிரிழப்பு! | Father Try To Take His Daughter Tuition Die Jaffna

இதனையடுத்து, குறித்த நபரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

அத்துடன் குடும்பஸ்தரின் சடலம் மீது உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *