யாழ்ப்பாணம் – நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபடும் பயணிகள் படகு ஒன்று நடுக்கடலில் இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் புத்தாண்டு அன்று இடம்பெறவிருந்த பாரிய அசம்பாவிதம்... உயிர் தப்பிய பயணிகள்! | Boat Broke Down Middle Sea Neduntheevu Jaffna

நெடுந்தீவிலிருந்து இன்றையதினம் (01-01-2025) பகல் 11:30 மணிக்கு குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபட்ட கரிகணன் பயணிகள் படகானது நடுக்கடலில் பயணித்த வேளை திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு செயலிழந்தது.

இதன்போது குறித்த படகில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், உட்பட சுமார் 60 பேருக்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர்.

யாழில் புத்தாண்டு அன்று இடம்பெறவிருந்த பாரிய அசம்பாவிதம்... உயிர் தப்பிய பயணிகள்! | Boat Broke Down Middle Sea Neduntheevu Jaffna

குறித்த படகானது கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் கடலில் தத்தளித்த நிலையில், இதனை அவதானித்த நெடுந்தீவு மக்கள் தமது சிறிய மீன்பிடி படகுகளை கொண்டு சென்று பயணிகளை நிகழவிருந்த பாரிய ஆபத்தில் இருந்து விரைந்து மீட்டனர்.

மேலும், நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் படகின் உதவியுடன் குறித்த பயணிகள் படகானது கரைக்கு கொண்டுவரப்பட்டது.

யாழில் புத்தாண்டு அன்று இடம்பெறவிருந்த பாரிய அசம்பாவிதம்... உயிர் தப்பிய பயணிகள்! | Boat Broke Down Middle Sea Neduntheevu Jaffna

இதேவேளை, குறித்த பகுதிக்கு நெடுந்தீவு பிரதேச செயலாளர் மற்றும் ஊழியர்களும் விரைந்து சென்று நிலைமைகளை அவதானித்தனர்.

இச் சம்பவத்தால் படகில் பயணித்த மக்கள் பதற்றமான நிலையினை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments