தன்னுடைய 30 வருட போராட்டம் இந்த முள்ளிவாய்க்கால் இறுதியோடு முடிவுக்கு வருகின்றது என முன்னாள் போராளி சூசை எங்களிடம் தெரிவித்தார்.” என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி (T. Sathiyamoorthy) தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் நக்கீரன் சபை – புட்டுக்கதை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.       

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”2018 ஆம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி முள்ளிவாய்க்காலில் முக்கிய போராளிகளான சூசை, பானு, சொர்ணம் ஆகிய மூவரையும் சந்தித்தோம்.

தன்னுடைய 30 வருட போராட்டம் இந்த முள்ளிவாய்க்கால் இறுதியோடு முடிவுக்கு வருகின்றது எனவும் ஐக்கிய நாடுகள் முகவர்கள் வருகின்ற போது இந்த ஆயுதங்களை கையளித்து விட்டு நான் போகப் போகின்றேன் என சூசை எங்களிடம் தெரிவித்தார். இருப்பினும் ஏனையவர்கள் இறுதி வரை போராடப்போவதாக தெரிவித்தனர்.

எனக்கு 2009 இற்கும் 2024 இற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. முள்ளிவாய்க்காலை உணர்வுபூர்வமாக கடமை செய்த இடமாக தான் பார்க்கின்றேன். அதைக்கூறி எனக்கு ஒரு பதவியோ அல்லது ஏதோவொன்றைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை.

முள்ளிவாய்க்கால் இடம்பெயர் வைத்தியசாலையில் பணியாற்றிய ஒவ்வொரு நாட்களையும் மறக்க முடியாது. உடையார்கட்டு வைத்தியசாலையில் பணியாற்றிய போது ஒரு தாதியர் செல் விழுந்த உடனேயே கண் முன்னாலே இறந்து போனமை மறக்க முடியாத ஒரு சம்பவம், அத்துடன் முள்ளிவாய்க்காலின் கடைசி 3 நாட்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத வடு.” என தெரிவித்தார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *