யாழ்ப்பாணத்தில் (Jaffna) தமக்கு காணி வேண்டும் என கொழும்பு மற்றும் பாணந்துறையைச் சேர்ந்த சிங்கள மக்கள் விண்ணப்பித்துள்ளதாக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (09) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கொழும்பு (Colombo), வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, வத்தளை போன்ற பகுதிகளில் தமிழர்கள் குடியேற்றப்பட்டு உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஊடக இணைப்பாளர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளதாக சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார். 

குறித்த பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் நிரந்தரமாக வாழ்ந்த மக்கள் என்றும் குடியேற்றப்பட்டார்களா அல்லது பரம்பரையாக வாழ்ந்தார்களா என தேசிய மக்கள் சக்தி ஊடக இணைப்பாளருக்கு வகுப்பு எடுக்க வேண்டும் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் 1970 – 1983 ஆண்டு காலப்பகுதிகளிலே அநுராதபுரம், மலையகம் ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் கொத்துக்கொத்தாக விரட்டப்பட்டார்கள் என்றும் அவர்கள் மீண்டும் குடியேற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்….

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *