மலையக தியாகிகள் தினம் மற்றும் நான்காவது உலகத்தமிழாராச்சி மாநாட்டு படுகொலை நினைவேந்தல் ஆகியன உணர்வுபூர்வமாக  அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் (University of Jaffna) இன்று (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தலானது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில், பல்கலைக்கழக பொதுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.

அரங்கேற்றப்பட்ட படுகொலை

1974 ஆம் ஆண்டு நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சிறீலங்கா அரச காவல்துறையால் அரங்கேற்றப்பட்ட படுகொலைகளால் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்து 2025 ஆம் ஆண்டுடன் ஆண்டுகள் 51 நிறைவடைகின்றன.

யாழ். பல்கலையில் 51ஆவது தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் | 51St Tamil Research Massacre Commemoration

இன்று வரையில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நீதி என்பது மறுக்கப்பட்டதொன்றாகவே நீள்கின்றது.

அத்தோடு, ததேயிலைச் செடிகளின் நடுவே உழைப்புச் சுரண்டல்களுக்கும் அடிப்படை உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கி அடிமைப்படுத்தப்பட்ட மலையக தமிழ் மக்களினுடைய சமூக அரசியல் விடுதலைக்கான பயணத்தில் தம்முயிர் தந்தவர்களை நினைவேந்தும் முகமாக இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Gallery

Gallery

Gallery

GalleryGalleryGalleryGallery

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *