மட்டக்களப்பில்(Batticaloa) பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று(10.01.2025) இடம்பெற்றுள்ளதாக கல்குடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 65 வயதுடைய கரிசன் ஓ என்பவரே உயிரிழந்துள்ளார்.

மீட்பு நடவடிக்கை

ரஷ்யாவில் இருந்து  இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட குறித்த நபர் சம்பவதினமான இன்று(10) காலை பாசிக்குடா கடலில் நீராடிய போது கடல்மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், அங்கு இருந்த கடற்படையினர் உடனடியாக செயற்பட்டு அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து, அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அந்த  நபர் உயிரிழந்துள்ளார்.

பாசிக்குடாவில் கடலலையால் ரஷ்ய பிரஜைக்கு நேர்ந்த துயரம் | Russian Drowned While Swimming In Passikudah Beach

இந்நிலையில், அவரது சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்குடா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *