அம்பாறை – திருக்கோவில் பகுதியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய துண்டுபிரசுர விநியோகம் காவல்துறையினரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரசார நடவடிக்கை வாக்காளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோத முன்னெடுக்கப்படுவதாகக் காவல்துறையினர் இதன்போது, அறிவித்துள்ளனர்.

துண்டுபிரசுர விநியோகத்திற்கு தடை ; தேர்தல்கள் அலுவலகத்தில் முறைப்பாடு | Pamphlet Distribution Complaint Elections Office

இதனையடுத்து, இருதரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றிருந்ததுடன், பின்னர் செல்வராசா கஜேந்திரன் தரப்பினர் பிரசார நடவடிக்கையை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்திருந்தனர்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்துக்கு முறைப்பாடளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *