மட்டக்களப்பில் வயதான பெண் ஒருவர் வீதியை கடக்க முற்பட்ட போது வான் மோதியதில் குறித்த பெண் படுகாயமடைந்த  நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சற்று முன் இடம்பெற்ற இச்சம்பவத்தில், விபத்தை ஏற்படுத்திய வான் சாரதி தப்பியோடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மட்டு கல்முனை பிரதான வீதி வழியே மட்டக்களப்பிலிருந்து மருதமுனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான், கோட்டைக் கல்லாறு பகுதியால் பயணிக்கும் போது கோட்டைக்கல்லாறு புத்தடிக் கோயிலுக்கு அருகாமையில் பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட வயதான பெண் மீது மோதியுள்ளது.

தமிழர் பகுதியில் வாகன விபத்து ; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிப் பெண் | Van Elderly Woman Admitted Hospital Serious Injur

இதன்போது, குறித்த பெண் படுகாயமடைந்ததுடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், விபத்தை ஏற்படுத்திய வானின் சாரதி வானைக் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் அவ்விடத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை, கோட்டைக் கல்லாறு பகுதியில் பலத்த மழை பெய்துகொண்டிருந்த சமயமே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *