உக்ரைனுக்கான (Ukraine) மனிதாபிமான உதவிகளை ரத்து செய்ய இருப்பதாக மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவோக்கியாவின் (Slovakia) பிரதமர் ரோபர்ட் ஃபிகோ (Robert Figo) எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

உக்ரைன் ஊடாக ரஷ்ய (Russian) எரிவாயு விநியோகம் முடக்கப்பட்ட நிலையில், ஸ்லோவோக்கியாவின் அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஸ்லோவோக்கியாவின் பொருளாதாரத்தை சேதப்படுத்தும் நடவடிக்கையை உக்ரைன் முன்னெடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எரிவாயு விநியோகம் 

இதனடிப்படையில், உக்ரைன் அகதிகளுக்கு அளிக்கப்பட்டுவரும் சலுகைகளை ரத்து செய்ய இருப்பதாகவும் ரஷ்ய எரிவாயு விநியோகம் தொடர்பில் ஜெலென்ஸ்கி பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதம் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

ஜெலென்ஸ்கிக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி மிரட்டல் : உக்ரைனுக்கான உதவிகள் ரத்து | The Prime Minister Threatened Zelensky

உக்ரைனில் இருந்து எரிவாயு விநியோகம் நிறுத்தப்படுவதால் ஸ்லோவாக்கியாவிற்கு 1.5 பில்லியன் யூரோக்கள் அதிகமாக செலவிட வேண்டிய நெருக்கடி ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒப்பந்த கட்டணம்

இந்தநிலையில், தங்கள் நாட்டுக்கு சேர வேண்டிய ஒப்பந்த கட்டணத்தையும் இழக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதுடன் இதன் காரணமாக உக்ரைனுக்கான மனிதாபிமான உதவிகளை ரத்து செய்ய இருப்பதாகவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஜெலென்ஸ்கிக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி மிரட்டல் : உக்ரைனுக்கான உதவிகள் ரத்து | The Prime Minister Threatened Zelensky

அத்தோடு, எரிவாயு விநியோகம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புடினை (Vladimir Putin) நேரிடையாக சந்தித்து ரோபர்ட் ஃபிகோ கோரிக்கை வைத்த விவகாரம் சொந்த நாட்டில் கடும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், தற்போது ரோபர்ட் ஃபிகோவின் ரஷ்ய ஆதரவு நிலையே, அவரது பதவியை பறிக்கும் நெருக்கடிக்கு கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *