களுத்துறை, தொடங்கொடை, வில்பாத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (15) அதிகாலை இடம்பெற்றுள்ளது. எனினும் துப்பாக்கி பிரயோகத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர், தொடங்கொடை பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்