டிக்டொக் சமூக வலைத்தளத்திற்கு அடிமையான இளம் மனைவி, குடும்பத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கணவனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடன் செலுத்த முடியாமல் சிரமங்களுக்கு நிதி அமைச்சின் நற்செய்தி

கண்டி தம்புள்ளையை சேர்ந்த 4 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு வீட்டை விட்டு சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

டிக்டொக் மோகத்தால் குடும்பத்தை விட்டு சென்ற இளம் தாய் ; பரிதவிக்கும் பிள்ளைகள் | Mother Husband 4 Children Stranded Tiktok

குடும்ப வறுமை காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஊடாக குவைத்திற்கு பணிப்பெண்ணாக மனைவி சென்றுள்ளார்.

இதன்போது டிக்டொக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் அதற்கு அடிமையானதாக பாதிக்கப்பட்ட கணவன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக குடும்பத்துடன் தொடர்பு கொள்வதை முற்றாக நிறுத்திய மனைவி, ரிக்ரொக்கில் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார்.

மனைவியின் செயற்பாட்டில் கடும் அதிருப்தி அடைந்த கணவன், மனைவி மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திடம் கோரியுள்ளார்.

ஐ.தே. கட்சி தொடர்பில் ஐ.ம.சக்தியின் செயற்குழுவில் தீர்மானம்

எனினும் குறித்த பெண் ஏற்கனவே இலங்கை வந்துள்ள நிலையில் வேறு நபருடன் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன், பொலிஸாரின் உதவியுடன் அவரை தேடிப்பிடித்து வீட்டு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளார்.

வீட்டுக்கு வந்த மனைவி சில தினங்களில் அனைவரையும் ஏமாற்றிய நிலையில் மீண்டும் தப்பிச் சென்றுள்ளதாக கணவன் தெரிவித்துள்ளார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *