வெலிகந்த, ருஹுனுகெத்த பகுதியில் T-56 Mark 1 ரக துப்பாக்கி, ஒரு மெகசின் கேஸ் மற்றும் இராணுவத்திற்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் 18 தோட்டாக்களுடன் 53 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் இராணுவ பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை இராணுவ பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரும் மேல் மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.