மட்டக்களப்பில் பெய்துவரும் மழை காரணமாக உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் 4 வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக திட்ட முகாமையாளர் செ.மேகநாதன் தெரிவித்துள்ளார்.

குளத்தின் நீர் மட்டம் இன்று (22) காலை 31அடி 8அங்குலமாக உயர்ந்துள்ளதால் குளத்தின் 4 வான்கதவுகள் 5 உயரத்தில் திறந்து திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் செக்கனுக்கு 3425 கன அடி வெளியேற்றப்படுவதாக செ.மேகநாதன் குறிப்பிட்டுள்ளார்.

வேண்டுகோள்

உன்னிச்சை குளத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அப்பகுதியை அண்மித்த தாழ் நிலங்கள் பெரிதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நாட்டில் பெய்துவரும் கன மழையால் மேலும் சில குளங்களின் வான்கதவுகள் திறப்பு | Opening Of The Floodgates Of Unnichchai Dam

 இதனால் உன்னிச்சை குளத்தை அண்மித்த பகுதியில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நவகிரிக்குளத்தின் நீர்மட்டம் 30அடி 9அங்குலம், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 16அடி 10 அங்குலம், வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 19அடி 7அங்குலம், வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 12அடி 8அங்குலம், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 15அடி 5அங்குலம், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 12அடியாகவும் உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

வவுனியா

மேலும், வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் 20 குடும்பங்களை சேர்ந்த 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தமது இருப்பிடங்களில் இருந்தும் வெளியேறியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்ப்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வவுனியாவில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது.

இதனால் வவுனியா மாவட்டம் தழுவிய ரீதியில் இடர்நிலமை ஏற்பட்டுள்ளதுடன் பல வீடுகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

பாதிப்பு

அந்தவகையில், வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நெளுக்குளம் பகுதியில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் பெய்துவரும் கன மழையால் மேலும் சில குளங்களின் வான்கதவுகள் திறப்பு | Opening Of The Floodgates Of Unnichchai Dam

செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் பீடியாபாம் பகுதியில் 19 குடும்பங்களை சேர்ந்த 61 பேரும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மத்திய நீர்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள பாவற்குளம், இராசேந்திரங்குளம், ஈரப்பெரியகுளம், முகத்தான்குளம், மருதமடுக்குளம் மற்றும் கல்மடு அணைக்கட்டு என்பன நீர் வரத்து அதிகரித்தமையால் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருகின்றன. இதனால் இதன் கீழ் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

செய்தி – திலீபன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்

GalleryGalleryGalleryGallery

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *