வலய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கொழும்பு வடக்கு மோட்டார் சைக்கிள் குழுவினர் வேனை துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் வேனில் இருந்த ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வேன் மீது துப்பாக்கிச்சூடு | Shots Fired Van Traveling Violation Police Orders

சம்பந்தப்பட்ட வேனை கிரேன்பாஸ் பொலிஸ் பிரிவில் சோதனைக்காக நிறுத்த உத்தரவிடப்பட்டதாகவும், ஆனால் அது தொடர்ந்து சென்றதால் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த வேனில் இருந்து சட்டவிரோத மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *