அமெரிக்காவில் (United States) சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் பணிகளில் அமெரிக்க அரசாங்கத்தினர் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்ள் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்தே புலம்பெயர்தலுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறிக்கொண்டே இருந்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் (Donald Trump).
ஆனால் தற்போது, அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதும், அவர் சொன்னது போலவே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதிரடி நடவடிக்கை
இதன் முதற்கட்டமாக 538 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் நுற்றுக்கும் மேற்பட்டோர் இராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளதாவது, “சட்டவிரோதமாக குடியேறிய 538 குற்றவாளிகளை ட்ரம்ப் நிர்வாகம் கைது செய்துள்ளது.
அதேபோல் சட்டவிரோதமாக குடியேறிய நூற்றுக்கணக்கானோரை இராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தியும் உள்ளனர்.
இ
ட்ரம்ப் நிர்வாகம்
வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தல் நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் டுவிட்டர் தளத்திலும் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க ட்ரம்ப் நிர்வாகம் செய்து வரும் பணியின் ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே இது என்று கூறி பதிவிடப்பட்டுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்