2024 YR4 என பெயரியடப்பட்ட சிறுகோள் எதிர்வரும் 2032 டிசம்பரில் பூமியை மோத 1.2% வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிறுகோள் 196 அடி (60 மீட்டர்) அகலம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன் அது தற்போது 27 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

குறித்த சிறு கோள் தொடர்பில் விஞ்ஞானிகள் தெரிவிக்கையில், “2024 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிறு கோள் ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தைப் போல பாதி அகலம் கொண்டது.

2024 YR4 சிறுகோள் 

நாசாவின் NEO ஆய்வுகள் மையம் (CNEOS) தகவலின் படி, இது 2032 டிசம்பர் 22 அன்று சுமார் 66,000 மைல் வேகத்தில் பூமியை நெருங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், சுற்றுப்பாதை நிச்சயமற்ற தன்மைகளைக் கருத்தில் கொள்ளும்போது, ​​​​அந்த நெருக்கமான அணுகுமுறை நமது கிரகத்தில் நேரடி தாக்கமாக மாறும். அத்தகைய தாக்கம் வளிமண்டலத்தில் வெடிப்பை ஏற்படுத்தலாம்.

பூமியை மோத வாய்ப்பு..! நெருங்கிக் கொண்டிருக்கும் சிறுகோள் தொடர்பில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை... | Scientists Warn 2024 Yr4 Asteroid Will Hit Earth

2024 டிசம்பர் 27, சிலியின் ரியோ ஹர்டாடோவில் உள்ள Asteroid Terrestrial-Impact Last Alert System (ATLAS) தொலைநோக்கி இதனை கண்டுபிடித்தது.”என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, 2024 YR4 கடந்த வருடம் டிசம்பர் 25ஆம் திகதியன்று பூமிக்கு நெருக்கமாக கடந்து சென்றபோது, ​​அதன் நெருங்கிய அணுகுமுறை பூமியிலிருந்து 828,700 கிலோ மீற்றர் தூரமாக இருந்ததாக நாசாவின் NEO ஆய்வுகள் மையம் (CNEOS) தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இருப்பினும், சிறுகோள் 2032 டிசம்பர் 22 அன்று பூமிக்கு மிகவும் நெருக்கமான வகையில் மீண்டும் கடந்து செல்லும் என தெரிவிக்கப்படுகிறது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments