யாழில் வீதியில் சென்றவரிடம் கொள்ளை ; நீதிமன்றம் வழங்கிய உத்தரவுயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற நபர் ஒருவர் 25 ஆயிரம் ரூபா மற்றும் மதுபான போத்தல்களை கொள்ளளையடித்த இருவரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நபர் ஒருவர் மதுபான போத்தல்கள் மற்றும் 25 ஆயிரம் ரூபா பணத்துடன் மூளாய் வீதியால் பயணித்துள்ளார். இதன்போது வீதியால் வந்த இருவர் அவரது மதுபான போத்தல்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

யாழில் வீதியில் சென்றவரிடம் கொள்ளை ; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | Court Issues Order For Robbery Passerby In Jaffna

இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மூளாய் நேரம் பகுதியை சேர்ந்த இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்றையதினம் முற்படுத்தியவேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *