Sri Lanka Police

யாழ்ப்பாணம் (Jaffna) காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து அரியாலை – மாம்பழம் சந்தியில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் நோக்கி துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த குறித்த நபரின் மீது, யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Jaffna) கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விபத்தினை ஏற்படுத்திய சாரதி யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *