பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று (5) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

சுமார் 35 முதல் 38 வரையான வயதுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சடலமானது கடும் நீல நிற ரீசேட் அணிந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இம்மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.