யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் 36 வயதான 2 பிள்ளைகளின் தாயார் , தவறான உறவால் கிணற்றில் குதித்த நிலையில் நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பெண்ணின் கணவர் வெளி மாவட்டம் ஒன்றில் தனியார் துறையில் உயர் பதவியில் உள்ள நிலையில் யாழில் உள்ள அரச நிறுவனம் ஒன்றில் உயர் பதவி வகித்து வருவதாகவும் தெரியவருகின்றது.

பெண்ணிடம் மிரட்டி பணம் பறிப்பு
பெண்ணுக்கும் கணவருக்கும் இடையில் சில காலமாக முரன்பாடுகள் வலுத்த நிலையில் கணவன் வீட்டுக்கு வருவதை தவிா்த்திருந்தார்.
அதேசமயம் பெண்ணின் அயல் வீட்டில் யாழ் பல்கலைக்கழக மாணவன் தங்கியிருந்து கற்று வந்துள்ளார்.
இந் நிலையில் பல்கலைக்கழக மாணவன் பெண்ணுடன் தவறான தொடர்புகளைப் பேணி அதனை வீடியோவாக எடுத்து வந்ததாகவும், மாணவன் போதைக்கு அடிமையானவர் என்பதனால் பெண்ணிடம் பணம் கேட்டு வற்புறுத்தி வந்ததாகவும் தெரியவருகின்றது.
இதனையடுத்து பெண் அவனை விட்டு விலகியதுடன், மாணவன் தங்கியிருந்த வீட்டுச் சொந்தக்காரர்களிடமும் மாணவன் தொடர்பாக கூறி அவனை அங்கிருந்து அகற்ற முயன்றுள்ளார்.
இதனால் கோபமடைந்த மாணவன் எடுத்து வைத்திருந்த வீடியோக்களை காட்டி பெண்ணை அச்சுறுத்தி நகைகள் மற்றும் பணம் என்பவற்றை தொடர்ச்சியாக பெற்று வந்ததாகத் தெரியவருகின்றது.
இதனையடுத்து தனது பிள்ளைகளை பாடசாலைக்கு விட்டுவிட்டு அயல்வீட்டு தம்பதிகளிடம் மாணவன் வீடியோ காட்டி அச்சுறுத்துவதை தெரிவித்த பெண் கிண்ற்றில் குதித்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இலங்கை பேருந்து, ரயில் சாரதிகளாக பெண்கள்; அதிரடி காட்டும் அரசாங்கம்!
இதனையடுத்து அயல்வீட்டு தம்பதிகள் ஊடாக தகவல் அறிந்த அங்கு நின்றவர்ககளால் மாணவன் கடுமையாக தாக்கியதாகவும் தெரியவருகின்றது.