தமிழ் தலைமைகளுக்கு அழுத்தம் கொடுகின்றதா இந்தியா : ஒருமித்து வாக்களிப்பதே சிறந்தது – அஜித் டோவல்இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு கோஷம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது கருத்து வெளியிட்ட இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து தான் எதனையும் கூறப்போவதில்லை எனவும், இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்றும் தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தலைமைகளுக்கு அழுத்தம் கொடுகின்றதா இந்தியா : ஒருமித்து வாக்களிப்பதே சிறந்தது - அஜித் டோவல் | Tamil Representatives Met India Security Adviser

இந்தச் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும், ரெலோவின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனுக்கும், புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனடனிப்படையில், சந்திப்பில் சிறீதரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்த போதிலும், வெளிநாட்டுப் பயணமொன்றுக்குச் செல்ல வேண்டியிருந்ததன் காரணமாக, சந்திப்பின் தொடக்கத்திலேயே சிறிதரன் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

இந்தியாவின் (India) தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை (Ajith Doval) இலங்கை (Sri Lanka) தமிழ் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பானது கொழும்பில் (Colombo) இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

தமிழ் பிரதிநிதிகள் 

இந்தநிலையில், அஜித் தோவலை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் (Senthil Thondaman), அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman), நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் (Marudapandi Rameswaran), கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் (Aravinda Kumar) மற்றும் தொழில் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான வடிவேல் சுரேஷ் (Vadivel Suresh) ஆகியோர் மரியாதை நிமித்தமாக கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தமிழ் தலைமைகளுக்கு அழுத்தம் கொடுகின்றதா இந்தியா : ஒருமித்து வாக்களிப்பதே சிறந்தது - அஜித் டோவல் | Tamil Representatives Met India Security Adviser

இச்சந்திப்பின் போது இலங்கை மற்றும் இந்தியாவிற்குமிடையிலான உறவை வழுப்படுத்துதல் மற்றும் சமூக பொருளாதார விடயங்கள் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

=a!f&btvi=6&fsb=1&dtd=823

மேலும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானால் நினைவு சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.தங்களிற்குத் தேவையானவர்கள் பற்றி அவர் வாய்திறக்கவில்லை காரணம் அதுவே அவர்களிற்குத் தோல்வியாக அமையலாம்,

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *