ஈழத்தமிழர்களை பொருத்தமட்டில் தமிழர்களுக்காக அநுர (Anura Kumara Dissanayake) தரப்பினர், இதுவரையிலும் எந்தவொரு நல்ல விடயத்தையும் முன்னெடுத்தல்லையெனவும் மற்றும் இனி தமிழர்கள் தொடர்பில் நடக்கப்போவதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டுமெனவும் ஊடகவியலாளர் தமிழரசு (Tamilarasu) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை ஐபிசி தமிழில் இடம்பெற்ற நேர்காணலொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தல் தொடர்பில் தமிழர்களுடைய மனநிலையை சரியாக வெளிப்படுத்தும் அரசியல் கட்சிகள் தமிழர்களுக்கு பொருத்தமாக அமையவில்லை.

தமிழர்களுடைய வாக்கு

தமிழர்களுடைய வாக்குகளானது தங்களது நலனுக்காகவும், தனி நபர் சுருதி பாடுவதற்காகவும் மற்றும் தாங்கள் கூறினால் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நிலைப்பாட்டுடனும் அரசியல்வாதிகளால் பெறப்படுகின்றது.

அத்தோடு 2009 ஆம் ஆண்டிலிருந்து இராணுவமானது அரச உத்தரவுகளை நிறைவேற்றுகின்ற தங்களது கொள்கைகளில் அப்படியே இருக்கின்றார்கள்.

இந்தநிலையில், வரப்போகின்ற தமிழருடன் தொடர்புடைய நிகழ்வுகளில் ஜனாதிபதியின் கீழ் இராணுவத்தினர் எவ்வாறு செயற்படுகின்றார்கள் என்பதை வைத்து கொண்டுதான் தமிழர்களின் நிலைப்பாட்டை கூற முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அநுரவின் அரசியல் எதிர்காலம், அநுரவின் ஆட்சியில் தமிழர்களின் வகிபங்கு, இலங்கை அரசியல் மீதான (China) இந்தியாவின் பார்வை மற்றும் அநுரவின் அரசியலில் சஜித் மற்றும் ரணிலின் ஈடுபாடு என்பவை தொடர்பில் ஊடகவியலாளர் தமிழரசு தெரிவித்த கருத்துக்களை அறிந்துகொள்ள கீழுள்ள காணொளியை பார்வையிடவும்,

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *