தற்போது  சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்துவரும் பிரச்சினைங்களுள் புற்றுநோய் மிக முக்கிய இடம் வகிக்கிறது. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் வளர்ந்து, கட்டுப்பாடில்லாமல் பெருகி அழிக்கும் நிலையே புற்றுநோய் (cancer) ஆகும். 

சில நேரங்களில் இது மற்ற உறுப்புகளுக்கு நேரடியாகவோ, ரத்தம் அல்லது நிணநீர் மூலமாகவோ பரவுகிறது. அனைத்து புற்றுநோய்களும் உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் பிரிதலைக் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் சேதமடைவதால் ஏற்படுகின்றன.

புற்றுநோய் காரணிகள் 

பரம்பரை, தொற்றுகள், நாள்பட்ட வீக்கம், ரசாயன வெளிப்பாடு, கதிர்வீச்சு வெளிப்பாடு, ஹார்மோன் மாற்றங்கள், புகைத்தல், ஆல்கஹால்  போன்ற பல்வேறு காரணிகள்  மரபணு சேதத்துக்கு காரணமாக அமைகின்றது. 

இந்த கலங்கள் பிரிந்து பெருகி ஏனைய தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சி அடைந்த நிலையில் இந்த புற்றுநோய் கலங்கள் குருதியின் வழியாக பரவுகின்றன.

Blood cancer: இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ இரத்தப் புற்றுநோய் அபாயம் உறுதி | Blood Cancer Symptoms In Tamil

புற்றுநோய் தொடர்பான அறிகுறிகளை நோக்குமிடத்து உடலில் உள்ள உறுப்புகளில் ஒருவித தடிப்பு அல்லது வீக்கம், உடலில் உள்ள மச்சத்தில் ஏற்படும் மாற்றங்கள், ஆறாத புண்கள், தொடர்ச்சியான இருமல் மற்றும் கரகரப்பான கம்மிய குரல், உணவை விழுங்குவத்தில் சிரமம், உடல் எடையில் திடீர் மாற்றம், மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் நேரத்தில் மாற்றம், இயல்புக்கு மாறான இரத்த போக்கு, இரத்த கசிவு போன்றன குறிப்பிட்டப்படுகின்றது.

Blood cancer: இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ இரத்தப் புற்றுநோய் அபாயம் உறுதி | Blood Cancer Symptoms In Tamil

இந்த அறிகுறிகள் நோயின் தன்மைக்கு ஏற்ப மாறுபடலாம். புற்றுநோய்க்கு சரியான நேரத்தில் உரிய சிகிச்சை முறையை ஆரம்பிப்பதன் மூலம் மரணத்தை தள்ளிப்போட முடியும்.

இரத்த புற்றுநோய்

நமது உடலில் இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜையில் உருவாகி, இரத்தசெல்களின் உற்பத்தியையும், செயல்பாட்டையும் பாதிக்கின்றன இது தான் “இரத்த புற்றுநோய்” என அழைக்கப்படுகின்றது.

Blood cancer: இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ இரத்தப் புற்றுநோய் அபாயம் உறுதி | Blood Cancer Symptoms In Tamil

இந்த நோயை எப்படி ஆரம்ப காலங்களில் கண்டறியலாம் என மருத்துவ ஆய்வுகள் விளக்கம் கொடுத்துள்ளது. இந்த விளக்கத்தை தான் தொடர்ந்து பார்க்க போகிறோம்.

இரத்தப் புற்றுநோய்களின் வகைகள்

லுகேமியா (இரத்த வெள்ளை அணுக்கள் மிகைப்பு) 

லிம்போமா (நிணநீர் சுரப்பி புற்றுநோய்)

மைலோமா (சோற்றுப்புற்று)

லுகேமியா 

லுகேமியா என்படுவது  வெள்ளை இரத்த அணுக்கள் தோன்றும் புற்றுநோயாகும். இது இரத்தம், எலும்பு மஜ்ஜை மற்றும் நிணநீர் மண்டலத்தில் உள்ளது.

Blood cancer: இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ இரத்தப் புற்றுநோய் அபாயம் உறுதி | Blood Cancer Symptoms In Tamil

லுகேமியா அறிகுறிகளின் கால அளவைப் பொறுத்து நாள்பட்ட மற்றும் கடுமையானதாக இருக்கலாம். நாள்பட்ட லுகேமியா உயிருக்கு ஆபத்தானது அல்ல, இருப்பினும் கடுமையான லுகேமியா உயிராபத்தை ஏற்படுத்தும். 

லுகேமியாவின் அறிகுறிகள்

காய்ச்சல் அல்லது குளிர் 

தொடர்ச்சியான சோர்வு, பலவீனம் 

அடிக்கடி அல்லது கடுமையான தொற்றுகள் 

தற்செயலாக எடை இழப்பு 

வீங்கிய நிணநீர் கணுக்கள்

விரிவாக்கப்பட்ட கல்லீரல் அல்லது மண்ணீரல் 

எளிதாக இரத்தப்போக்கு அல்லது சிராய்ப்பு

மூக்கில் இரத்தம் வருதல் 

உங்கள் தோலில் சிறிய சிவப்பு புள்ளிகள் (petechiae) 

அதிக வியர்வை, குறிப்பாக இரவில் 

எலும்பு வலி அல்லது மென்மையாதல் போன்றன இதன் முக்கிய அறிகுறிகளாகும். 

Blood cancer: இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ இரத்தப் புற்றுநோய் அபாயம் உறுதி | Blood Cancer Symptoms In Tamil

லிம்போமா

லிம்போமா என்பது லிம்போசைட்டுகள் எனப்படும் வெள்ளை இரத்த அணுக்களை பாதிக்கும் ஒரு வகை இரத்த புற்றுநோயாகும்.

லிம்போசைட்டுகள் பெரும்பாலும் நமது நிணநீர் மண்டலத்தில் வாழ்கின்றன மற்றும் தொற்று மற்றும் நோயை எதிர்த்துப் போராடுவதன் மூலம் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கின்றன. 

லிம்போமாவின் அறிகுறிகள் பெரும்பாலும் தெளிவற்றவை மற்றும் நோய்த்தொற்றுகள், இரும்புச்சத்து குறைபாடு மற்றும் தன்னுடல் தாக்க நோய்கள் போன்ற பிற நோய்களின் அறிகுறிகளைப் போலவே இருக்கும்.

Blood cancer: இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ இரத்தப் புற்றுநோய் அபாயம் உறுதி | Blood Cancer Symptoms In Tamil

பொதுவான அறிகுறிகள்

 ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிணநீர் சுரப்பிகளின் வீக்கம்

விவரிக்கப்படாத காய்ச்சல்

அடிவயிற்று வீக்கம்

அசாதாரண வியர்வை (குறிப்பாக இரவில்)

சோர்வு

பசியிழப்பு

சிராய்ப்பு அல்லது எளிதில் இரத்தப்போக்கு

எடை இழப்பு

அடிக்கடி தொற்றுகள் இருமல் , நெஞ்சு வலி , அல்லது சுவாசிப்பதில் பிரச்சனைகள் ராஷ் அல்லது அரிப்பு . 

மைலோமா

Blood cancer: இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ இரத்தப் புற்றுநோய் அபாயம் உறுதி | Blood Cancer Symptoms In Tamil

அசாதாரண பிளாஸ்மா செல்கள் எலும்பு அல்லது மென்மையான திசுக்களில் கட்டிகளை உருவாக்கலாம். ஒரே ஒரு கட்டி இருந்தால், இந்த நோய் பிளாஸ்மாசிட்டோமா என்று அழைக்கப்படுகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட கட்டிகள் இருந்தால், இந்த நோய் பல மயோலோமா என்று அழைக்கப்படுகிறது. இரண்டுமே வீரியம் மிக்க புற்று நோயாகும்.

ஆரம்ப அறிகுறிகள்

மலச்சிக்கல்

குமட்டல்

அதிகரித்த தாகம்

பசியின்மை மற்றும் எடை இழப்பு

எலும்பு வலி குழப்பம் அடிக்கடி தொற்று நோய்கள்

பலவீனம் (சோர்வு)

உங்கள் கைகள் மற்றும் கால்களில் பலவீனம் அல்லது உணர்வற்ற தன்மை 

இரத்தப் புற்றுநோய்கள், இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜையை பெரிதும் பாதிக்கின்றது. அதனை இரத்தப் பரிசோதனைகள், திசு ஆய்வுகள் மற்றும் இமேஜிங் சோதனைகள் வழியாக ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் சிகிச்சையளிக முடியும். எனவே இவ்வாறான அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாது.

Blood cancer: இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ இரத்தப் புற்றுநோய் அபாயம் உறுதி | Blood Cancer Symptoms In Tamil

புற்றுநோய் என்பது ஒரு உயிர் கொல்லி நோய் என மட்டுமே சிலர் நினைக்கின்றனர், ஆனால் உண்மையில் நவீன மருத்துவங்களின் மூலம் முடிந்தளவு குணப்படுக்கூடியதே.

எனவே புற்றுநோய் என்றதுமே அச்சமடைய தேவையில்லை மனஉறுதியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த நோயையும் எம்மால் வெற்றிகொள்ள முடியும். எம்மால் முடிந்தவரை புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகளை தவிர்த்து வாழ்வதே சிறந்தது. 

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *