பிரான்ஸில் இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர், அந்நாட்டு பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸின் புறநகர் பகுதியான பொபினியில் நேற்று முன்தினம் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது முல்லைதீவு, மல்லாவி பகுதியை சேர்ந்த 40 வயதான வைத்திலிங்கம் புவனேஸ்வரன் என்பவரே சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார்.

துப்பாக்கி சூடு

மன அழுத்தம் காரணமாக, அயல் வீட்டார்களுடன் குழப்பம் விளைவித்த நிலையில், பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் - அதிர்ச்சியில் தமிழர்கள் | Sri Lankan Shot Dead By Police In France

இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், குறித்த இலங்கை தமிழர் மீது இரண்டு தடவைகள் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கி சூடு நடத்துவதற்கான முகாத்திரம் இல்லாத போதும், பொலிஸாரின் இந்த கொடூரமான செயல் புலம்பெயர் வாழ் தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments