2009 மே 18, ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மிகக் கொடூரமான முறையில் இரத்தத்தால் எழுதப்பட்ட நாள்.

பாதுகாப்பு வலயம் என்று நம்பிச் சென்ற இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மீது, சர்வதேச விதிகளை மீறி குண்டுகளும், இரசாயன ஆயுதங்களும் இரக்கமின்றி வீசப்பட்டன. 

கண்ணெதிரே கருகி வீழ்ந்த உறவுகள், பசியால் துடித்த குழந்தைகள், குண்டுச் சத்தங்களுக்கு நடுவே அலறிய தாய்மார்கள் என முள்ளிவாய்க்கால் மணல் பரப்பு முழுவதும் தமிழ் மக்களின் உதிரத்தால் நனைந்தது.

காயமடைந்த உறவுகளுக்குக் கஞ்சி காய்ச்சிக் குடிக்கக் கூட வழியில்லாமல், பதுங்கு குழிக்குள் மரண பயத்தோடு கழிந்த அந்த நாட்கள், தமிழ் மக்களின் நெஞ்சை இன்றளவும் பிளக்கின்றன.

இந்நிலையில், அன்று உயிர்பிழைத்த ஈழத்தமிழர்களுக்கு இது ஒரு சாதாரண விடயம் அல்ல. அக்காலத்தில் இந்த அவலங்களை நேரில் கண்டு அவற்றை கடந்து வந்தவர் தான் அருட்தந்தை அன்டன் ஸ்டீபன். 

அந்த அவலங்களுக்கு மத்தியில் இன்றுவரையிலும் வெளிவராத பல இரகசியங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments