​கிண்ணியா- இடிமன் பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்றையதினம்(2.6.2026) இடம்பெற்றுள்ளது.

​கிண்ணியா, அஹமட் லேன் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பு

 ​உயிரிழந்த நபர் நேற்று (01) இரவு கிண்ணியா, ஈச்சந்தீவு பகுதிக்கு ஆற்று மணல் ஏற்றும் கூலித் தொழிலுக்காகச் சென்றுள்ளார்.

இன்று அதிகாலை வேலையை முடித்துவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கிண்ணியாவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு! | Man Dies In Motorcycle Accident Kinniya

​பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணை மற்றும் சி.சி.டி.வி காட்சிப் பதிவுகளின்படி, குறித்த நபர் மணல் ஏற்றுவதற்காகப் பயன்படுத்திய சவல் (மண்வாரி), மோட்டார் சைக்கிளின் கைப்பிடிக்குள் (Handlebar) சிக்கியுள்ளது.

மேலதிக விசாரணை

இதனால் மோட்டார் சைக்கிளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவர் வீதியில் தவறி விழுந்துள்ளார்.இதன்போது, குருநாகல் பகுதியில் இருந்து தேங்காய் ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லொறியின் சக்கரங்களுக்குள் அகப்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.​

கிண்ணியாவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு! | Man Dies In Motorcycle Accident Kinniya

விபத்துடன் தொடர்புடைய லொறியையும் அதன் சாரதியையும் கிண்ணியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.​

சம்பவம் குறித்து கிண்ணியா பிரதேச போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி ஏ. எம். முஸாமில் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments