UPDATE: ஹொரண – படகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 பேரின் சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஹொரணை, பட்டகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் சிக்கியுள்ளதாகவும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (03) பிற்பகல் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முதியோர் இல்லத்தில் பாரிய தீ விபத்து ; 8 பேரின் சடலங்கள் மீட்பு ; பலர் வைத்தியசாலையில் | Fire Accident In Horana

இந்தத் தீ விபத்தில் காயமடைந்த முதியோர் இல்லத்தைச் சேர்ந்த பலர்  கல்பாத மற்றும் ஹொரண வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதியோர் இல்லத்தில் பாரிய தீ விபத்து ; 8 பேரின் சடலங்கள் மீட்பு ; பலர் வைத்தியசாலையில் | Fire Accident In Horana

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments