வெனிசுவேலா கடற்கரைக்கு அப்பால் மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெனிசுவேலாவின் வடக்கு அரகுவா மாநிலத்திற்கு அருகே, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:20 மணிக்கு (19:20 GMT) 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கண்டறியப்பட்டதாக ஐரோப்பிய மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

வெனிசுவேலாவின் தலைநகரில்

வெனிசுவேலாவைத் தாக்கிய 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, பல பின் அதிர்வுகளும் சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த நிலநடுக்கங்களில் குறைந்தது 1,430 பேர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்ட நிலையில், உயிர் பிழைத்திருக்க வாய்ப்புள்ளவர்களை மீட்க மீட்புக் குழுவினர் தொடர்ந்து தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் 51,000 பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய நிலநடுக்கம், வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸுக்கு மேற்கே 70 கி.மீ (43.4 மைல்கள்) தொலைவில் பதிவாகியுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments