இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவிற்கு வருகை தரும்போது அவர் எந்த வகையிலும் கைது செய்யப்பட மாட்டார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் இருக்கும் வரை இஸ்ரேல் பிரதமர் எந்த வடிவத்திலும், எந்த சூழ்நிலையிலும் கைது செய்யப்பட மாட்டார் என உறுதியளித்து பதிவிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நெதன்யாகு அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளார்.

நேரடி உத்தரவு 

அந்த சந்தர்ப்பத்தில் அவரைக் கைது செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நகர அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக நியூயார்க் மேயர் ஜோஹ்ரன் மம்தானி அறிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே டொனால்ட் ட்ரம்ப் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

நெதன்யாகு கைது செய்யப்பட மாட்டார்: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு | Trump Threatens More Attacks On Iran

இதேவேளை, ஒவ்வொரு முறை ஈரான் ஒரு அமெரிக்கப் போர் வீரரைக் கொல்லும்போதும், அதற்கான விலையை அவர்கள் பல மடங்கு அதிகமாகச் செலுத்துவார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நேரடி உத்தரவு பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவர் டானியல் கேன் மற்றும் அனைத்து இராணுவத் தலைவர்களுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments