பொதுவாகவே அனைவருக்கும் தங்கள் கூந்தல் மீது தனி அக்கறையும் பிரியமும் இருக்கும். குறிப்பாக, நீளமான, அடர்த்தியான, ஆரோக்கியமான கூந்தலைப் பெற வேண்டும் என்பது பல பெண்களின் விருப்பமாகும்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு, வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் முடி உதிர்வு மற்றும் கூந்தல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

கூந்தல் காடு மாதிரி வளரணுமா? 3 சிறந்த விளக்கெண்ணெய் ஹேர் மாஸ்க்! | 3 Best Castor Oil Hair Masks For Hair Growth

இந்தப் பிரச்சினைகளைக் குறைத்து, கூந்தலை ஆரோக்கியமாகப் பராமரிக்க இயற்கையான வழிகளைப் பலரும் தேடுகின்றனர். அந்த வகையில், விளக்கெண்ணெயைப் பயன்படுத்தி வீட்டிலேயே எளிமையாகத் தயாரிக்கக்கூடிய 3 சிறந்த ஹேர் மாஸ்க்குகளைப் பற்றி இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

1. விளக்கெண்ணெய் + தேங்காய் எண்ணெய் + வெந்தயப் பொடி ஹேர் மாஸ்க் முடி உதிர்வைக் குறைத்து, கூந்தலை அடர்த்தியாகப் பராமரிக்க  உதவும்.

2. விளக்கெண்ணெய் + வெங்காயச் சாறு + கற்றாழை ஜெல்  ஹேர் மாஸ்க் கூந்தலின் வேர்களைப் பராமரித்து, ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

3. விளக்கெண்ணெய் + கிரீன் டீ + புதினா எண்ணெய் ஹேர் மாஸ்க் தலைச்சருமத்தைப் பராமரித்து, கூந்தலுக்குப் புத்துணர்ச்சியையும் பளபளப்பையும் அளிக்க உதவும்.

இந்த ஹேர் மாஸ்க்குகளை உங்கள் தலைச்சருமத்திற்கும் கூந்தலுக்கும் ஏற்ற வகையில் பயன்படுத்தலாம். வாரத்திற்கு 1–2 முறை பயன்படுத்தினால் சிறந்த பலனை பெறலாம்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments