படம்: த்ரெட்ஸ்

சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் இந்நேரம் எனக்குத் திருமணம் ஆகியிருக்கும்: அனீஷ்மா

தமிழ், மலையாளத் திரையுலகில் முன்னணி இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற துடிப்புடன் முன்னேறி வருகிறார் அனீஷ்மா அனில்குமார்.

‘சிறை’, ‘யூத்’, ‘மொத ராத்திரி’ என இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அவர், அண்மைய ஊடகப் பேட்டியில் மனம்திறந்து பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

சினிமாத் துறைக்கு வராமல் இருந்திருந்தால் இந்நேரம் அனீஷ்மாவுக்குத் திருமணம் முடிந்திருக்குமாம். ஒரு குடும்பத் தலைவியாகத்தான் தன்னைப் பார்த்திருக்க முடியும் என்கிறார்.

“ஏனென்றால், நான் வளர்ந்த சூழலும் கலாசாரமும் அப்படிப்பட்டது. எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை, கல்லூரியில் படிக்கும்போதோ அதற்குப் பிறகோ காதல் திருமணம் செய்துகொள்வது ஒரு தவறான விஷயமாகவே பார்க்கப்பட்டது.

“மேலும், அப்பா, அம்மா ஒரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தால், அந்த நபரைத் திருமணம் செய்து கொள்வதுதான் நல்லது என்று என் குடும்பத்தினர் நினைத்தனர்,” என்று அனீஷ்மா கூறியுள்ளார்.

ஒரு பெண்ணுக்குச் சொந்தமாக முடிவெடுக்கவும் கருத்துகளைச் சொல்லவும் பொருளியல் சுதந்திரம் எவ்வளவு முக்கியம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தனது வெற்றி குடும்பத்தாருக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதாகக் கூறியுள்ளார்.

“தொடக்கத்தில் எனது குடும்பத்தினர் திருமணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், தற்போது எனது திரையுலக வெற்றியைப் பார்த்துத் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொண்டுள்ளனர். இப்போது நான் விரும்பியபடி வாழவும் சினிமாவில் சாதிக்கவும் முழு ஆதரவு அளிக்கிறார்கள்.

“அது மட்டுமல்லாமல் ‘நீ விரும்பியபடி மகிழ்ச்சியாக வாழ்கிறாயா?’ என்று கேட்கும் அளவுக்கு அவர்களிடம் இப்போது பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments