பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின் கல்லேல்ல பகுதியில், மட்டக்களப்பை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

படுகாயமடைந்த பாதசாரி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஜெயந்திபுர பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவராவார்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments