1995ஆம் ஆண்டு சிறிலங்காவின் வடபகுதியில் நிலவி வந்த தற்காலிக அமைதிச் சூழல் முற்றாகச் சீர்குலைந்த நிலையில், யாழ்ப்பாணக் குடாநாடு அதுவரை கண்டிராத மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததைத் தொடர்ந்து, அப்போதைய சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது.

யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 17ஆம் திகதி சிறிலங்கா அரசாங்கம் ‘சூரிய கதிர்’  என்ற பெயரில் பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.

தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் போர் உக்கிரமடைந்ததுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றாகப் பாதிக்கப்பட்டது.

இதன் உச்சக்கட்டமாக, ஒக்டோபர் 30ஆம் திகதி யாழ்ப்பாண மக்களின் பாரிய வெளியேற்றம் இடம்பெற்றது. அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமது வீடுகள், உடைமைகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பின்னால் விட்டுவிட்டு பாதுகாப்புத் தேடி வெளியேறினர்.

1995ஆம் ஆண்டு யாழ்ப்பாண மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்திய இந்த வரலாற்றுச் சம்பவத்தின் பின்னணி, இராணுவ நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமானப் பாதிப்புகள் குறித்து விரிவாக ஆராய்கிறது இந்தக் காணொளி…

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments