அரசாங்கத்தை அமைக்க எந்த வழியும் இல்லை! நெதன்யாகுவுக்கு எச்சரிக்கைஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் அரசாங்கத்தை அமைக்க எந்த வழியும் இல்லை என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லாபிட் தெரிவித்த்துள்ளார்.

தமக்கு எதிரான போட்டி அரசியல் முகாம்கள் ஆளும் கூட்டணியை அமைப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததாகவும், 120 உறுப்பினர்களைக் கொண்ட நெசெட்டில் நெதன்யாகுவின் அணி 53 இடங்களையும், எதிர்க்கட்சியான சேஞ்ச் அணி 48 இடங்களையும், அரபு கட்சிகள் 19 இடங்களையும் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றப் பெரும்பான்மை

இரு முக்கிய கூட்டணிகளில் எதுவுமே நாடாளுமன்றப் பெரும்பான்மைக்குத் தேவையான 61 இடங்களைப் பெறவில்லை. சரிபார்ப்பு நடைமுறைகளைத் தொடர்ந்து, இறுதி முடிவுகள் நவம்பர் 4 அன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்தை அமைக்க எந்த வழியும் இல்லை! நெதன்யாகுவுக்கு எச்சரிக்கை | There Is No Way To Form A Government Netanyahu

இந்நிலையில் யாயிர் லாபிட் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “அவரிடம் இருப்பது அவ்வளவுதான். அவர் என்ன முயன்றாலும், அவரால் ஒரு அரசாங்கத்தை அமைக்க வழியில்லை. இப்போதுதான் மிகவும் கடினமான பகுதி வருகிறது.

அதுதான் ஒரு அரசாங்கத்தை அமைக்க முயற்சிப்பது. அரசாங்கம் அமைப்பது என்பது இதற்கு முற்றிலும் நேர்மாறானது. என்னால் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது. மேலும் ஆதரவாளர்களைப் பொறுமையாக இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments