வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் நீதியரசருமான சீ.வி. விக்னேஸ்வரனின் மகன் நிர்மலகுகன் விக்னேஸ்வரன் மேலதிக சொலிஸிஸ்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்மலகுகன் விக்னேஸ்வரன் எதிர்வரும் 2 ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் கடந்த சில வருடங்களாக பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றியுள்ளார்.

நடுவர் மன்றங்கள் 

இலங்கை சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், கட்டுமானச் சட்டங்களின் நடுவர் மன்றங்கள் உட்பட பல சர்வதேச நடுவர் மன்றங்களில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு காலத்தில், இவர் ஓமான் சுல்தானகத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தில் (2011-2014) சட்ட வல்லுநராகப் பணியாற்றியுள்ளார்.

அங்கு இவர் பல கட்டுமானத் திட்டங்களில் ஈடுபட்டிருந்தார். நிர்மலகுகன் விக்னேஸ்வரன் அமெரிக்காவிலுள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் இராஜதந்திரத்தில் முதுகலை பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார்.

மேலும் இவர் இலங்கை சட்டக் கல்லூரியில் இணையச் சட்டம் மற்றும் கட்டுமானச் சட்டம் ஆகியவற்றில் விரிவுரையாளராகவும் உள்ளார். இவர் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments