தங்காலை கோழித் திருட்டு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த குற்றத்துக்காக இருவருக்கு தங்காலை மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தங்காலை மேல் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளை எதிர்த்து, குற்றவாளிகளான ராஜபுரகே சுகத் வீரரத்ன மற்றும் ராஜமுனிகே நிஹால் சமிந்த ஆகியோரினால் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் கொண்ட குழு

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதிகளான ஜனக் டி சில்வா, மேனக விஜயசுந்தர மற்றும் சம்பத் பி. அபேகோன் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இன்று தீர்ப்பினை வழங்கியது.

இலங்கையில் கோழியால் வந்த வினை - ஒருவர் கொலை - இருவருக்கு மரண தண்டனை | Murder Over Stolen Chicken Death Sentences Of 2

விஜேமுனிகே குணவர்தன என்பவர் கிராமவாசி ஒருவரின் கோழியைத் திருடியதாக கூறி அன்றைய நாள் காலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அன்று மாலை, அவர் தனது வீட்டிற்கு அருகில் தாக்கப்பட்டார்.

முதலாவது குற்றவாளி அவரை கத்தியால் குத்தியபோது, இரண்டாவது குற்றவாளி அவரைப் பிடித்துக் கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட பாதிக்கப்பட்டவரின் தந்தை சாட்சியமளித்தார்.

இந்தத் தாக்குதலில் 11 குத்துக்காயங்களுக்கு உள்ளான அவர், சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

மரண தண்டனை

அரசுத் தரப்பின் முக்கிய சாட்சியான உயிரிழந்த நபரின் தந்தை முரண்பாடான சாட்சியங்களை அளித்ததாகவும், விசாரணை நீதிமன்றம் பிரதிவாதிகளின் வாதங்களை சரியாக பரிசீலிக்க தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட தரப்பின் சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

எனினும் தந்தையின் சாட்சியம் நம்பகமானது எனவும் அது பிற சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் மருத்துவ ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி குறுக்கு விசாரணையைத் திருப்திகரமாக எதிர்கொண்டதாக தீர்ப்பை வாசித்த நீதிபதி மேனக விஜயசுந்தர, தெரிவித்துள்ளார். அவர் நிகழ்வுகளை மிகைப்படுத்திச் கூறவில்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும், காயங்கள் தொடர்பான மருத்துவ ஆதாரங்களும் அரசுத் தரப்பின் வாதத்தை உறுதிப்படுத்துவதாக நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments