இத்தாலியில் உள்ள திருமணமான நபரை பெண் மருத்துவர் போல் ஆள்மாறாட்டம் செய்து செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி பணமோசடி செய்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலியில் இருபத்தைந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த, 71 வயதான திருமணமான நபர் கடந்த 25ஆம் திகதி இளம் பெண்ணை சந்திப்பதற்காக வருகை தந்துள்ளார்.

திட்டமிட்ட பணமோசடி 

சமூக ஊடகங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலி புகைப்படத்தை உருவாக்கி சந்தேகநபர், ‘திக்ஷானி பிரமோத்யா’ என்ற மருத்துவ மாணவி என தன்னை அறிமுகப்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இத்தாலியிலிருந்து வந்த கோடீஸ்வரருக்கு இளம் பெண்ணால் காத்திருந்த அதிர்ச்சி | Money Laundering Case Against Young Woman

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் மென்பொருளை பயன்படுத்தி இந்த திட்டமிட்ட பணமோசடி நடத்தப்பட்டுள்ளது.

தனது குடும்பத்தில் தான் மட்டுமே இருப்பதாகவும், தாய் சிறிய வீட்டில் வசிப்பதாகவும் கூறி, இத்தாலியில் உள்ள நபரின் அனுதாபத்தை பெற்று மருத்துவ மாணவியை போல உடையணிந்த தனது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களையும், சாதாரண புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்.

சூட்சமமாக, இந்த இளைஞன் ஒரு சிறப்பு மென்பொருளைப் பயன்படுத்தி பெண் குரலில் உரையாடியுள்ளார்.

இந்த உரையாடலாலும் போலிப் புகைப்படங்களாலும் ஏமாற்றப்பட்ட அந்த நபர், அவருக்கு உதவும் விதமாக, பலமுறை நான்கு வங்கிக்கணக்குகளுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணத்தை வரவு வைத்துள்ளார். மேலும், இரண்டு முறை நாட்டிற்கு பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன.

வங்கிக் கணக்குகள் குறித்து விரிவான விசாரணை

இந்த மோசடி குறித்து காலி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகள் குறித்து விரிவான விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இத்தாலியிலிருந்து வந்த கோடீஸ்வரருக்கு இளம் பெண்ணால் காத்திருந்த அதிர்ச்சி | Money Laundering Case Against Young Woman

சந்தேகநபர் ஆரம்பத்தில் மூன்று வங்கிக்கணக்குகளை வைத்திருந்ததும், பின்னர் தான் பணிபுரிந்த கைபேசி கடை உரிமையாளருடன் ஒரு கூட்டுக்கணக்கைத் திறந்து, அந்த கணக்கிற்கும் மோசடியாக பணத்தை மாற்றியதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரு பெண்ணாக ஆள்மாறாட்டம் செய்து பணமோசடி செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

களுத்துறை சேர்ந்த 21 வயதான விதானகே தீக்ஷண பிரமோத்ய என்ற சந்தேகநபரை தலா ஐந்து இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணை பத்திரங்களில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments