கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனத் திருத்தும் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற மதுபான விருந்தின் போது, 24 வயது இளைஞர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்து, எரித்து களனி ஆற்றில் வீசியதாக கூறப்படும் நால்வர் அடங்கிய கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

ஒரு வருடத்தின் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெல்லம்பிள்ளை – சேதுவத்தை வீதியை வதிவிடமாகக் கொண்ட “குழந்தை ஜேசு சேரன்”  என்பவரே இவ்வாறு கொலைச் செய்யப்பட்டுள்ளார்.

எரிக்கப்பட்ட தமிழ் இளைஞன்

கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் இருந்த பாகங்கள் பிரிக்கப்பட்டு, செல்வகம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பில் கொடூரமாக கொலை செய்து எரிக்கப்பட்ட தமிழ் இளைஞன் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் | Man Killed And 4 Arrested

கடந்த வருடம் ஒக்டோபர் 14 ஆம் திகதி குறித்த இளைஞர் காணாமல் போனது தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தின் மூலம் நீதிமன்றத்திற்கு விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டு ஆரம்ப விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இரகசியமாக விசாரணை மேற்கொண்டனர்.

அதற்கமைய காணாமல் போன நபர் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்பி கொட்டுவத்தை பிரதேசத்தில் உள்ள வாகனத் திருத்தகம் ஒன்றில்  அன்றைய தினம் நள்ளிரவு வரை அந்த மூவரும் மற்றும் மேலும் சிலரும் சேர்ந்து மது அருந்தியுள்ளமையும் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமது உறவினர் வீடு திரும்பவில்லை எனக் கூறி உறவினர்கள் கிராண்ட்பாஸ் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

காணாமல் போன இளைஞனின் உறவினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சென்று தமது உறவினரைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரிக்கைகளையும் விடுத்திருந்தனர்.

குறித்த இளைஞர் காணாமல் போனதுடன், அவருடன் மது அருந்தியதாகக் கூறப்படும் வாகனத் திருத்தகத்தின் உரிமையாளரும் மற்றைய நபரும் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

வெளிநாட்டு பயணத் தடை உத்தரவு

இதற்கமைய, குறித்த சந்தேக நபர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுக்கும் முகமாக வெளிநாட்டு பயணத் தடை உத்தரவு ஒன்றை பெற்றுக்கொள்ளவும்  அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

கொழும்பில் கொடூரமாக கொலை செய்து எரிக்கப்பட்ட தமிழ் இளைஞன் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் | Man Killed And 4 Arrested

பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய, கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் மாபோல, கறுப்புப் பாலம் அருகில் வைத்து ஜேசுசேரன் கொலைச் சம்பவம் தொடர்பாக வாகனத் திருத்தகத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், கொல்லப்பட்டவர் வந்த மோட்டார் சைக்கிள் பாகங்கள் செல்வகம பிரதேசத்தின் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட இளைஞரின் சடலத்தை வாகனமொன்றில் ஏற்றிச் சென்று பூகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொழிற்சாலை பின்புறமுள்ள பாழடைந்த பிரதேசத்தில் வைத்து எரித்து, பின்னர் கொஸ்ஹம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஸ்வத்தை பாலத்திலிருந்து களனி ஆற்றில் வீசியதாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலைச் சம்பவத்துடன் பிரதான சந்தேக நபருடன் மேலும் மூன்று சந்தேக நபர்கள் நுகேகொடை மற்றும் வத்தளை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments