பல்லேகல – தும்பறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரியின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கண்டி, பல்லேகலையிலுள்ள தும்பறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற 27 வயதுடைய கைதி நேற்று (1 ஆம்) திகதி இரவு சுமார் 8 மணியளவில் சிறை அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தார்.

சிறைச்சுவரில் இருந்து தப்பிக்க முயற்சி

கண்டி, கலகெதர பகுதியைச் சேர்ந்த 27 வயதான விளக்கமறியல் கைதியே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

7 கிராம் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்,அவர் சுமார் ஒரு வாரமாக விளக்கமறியல் காவலில் வைக்கப்பட்டிருந்த போது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறைச்சுவரில் இருந்து தப்பிக்க முயன்றபோது கைதி, அங்கு பணியில் இருந்த சிறை அதிகாரியின் துப்பாக்கியை பறிக்க முயன்றதாக சிறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறை ஆணையருமான செனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.

விசாரணை ஆரம்பம் 

உயிரிழந்தவருக்கு சுமார் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாகவும், அவரது மனைவி 2 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

திருமணமான ஆறு மாதத்தில் சிறையில் சுட்டுக்கொல்லப்பட்ட கைதி - மனைவி 2 மாத கர்ப்பிணி | Prisoners Being Shot Dead In Thumbara Prison

இந்நிலையில், உயிரிழந்தவரின் உடல் நேற்று இரவு கண்டி தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், குடும்பத்தினரும் சென்று பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments