யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், நண்பர்களுடன் வெளியில் சென்ற நிலையில் இன்று (02) குளமொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அளவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள குளமொன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தெல்லிப்பழை பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும், அளவெட்டிப் பகுதியில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இவர் நேற்று (01) தனது நண்பர்கள் சிலருடன் வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையிலேயே, இன்று குளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்துத் தெல்லிப்பழை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments