கள்ளங்கபடமில்லாத அந்தக் குழந்தைகளின் சிரிப்புக்குப் பின்னால், சொல்லில் அடங்காத பெருந்துயரம் ஒன்று மறைந்திருப்பதையும் கண்டுகொண்டேன்.
கொஞ்சம் கொஞ்சமாகப் பறிபோய்க் கொண்டிருக்கும் நமது எல்லைக் கிராமங்களைத் தேடிப் பயணிக்க வேண்டும்.
அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் நம் மக்களைச் சந்திக்க வேண்டும். அவர்களின் கதைகளைக் கேட்க வேண்டும். அவர்களின் வலிகளைப் புரிந்துகொண்டு, அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும்.
இது யாரோ சிலரின் பொறுப்பு மட்டும் கிடையாது நம் ஒவ்வொருவருக்கும் இங்கு ஒரு பெரும் பொறுப்பு இருக்கிறது.
நிலமிழந்தால் பலமிழந்துபோவோம்
எனவே இயலுமானவரை நம் மண்ணையும், மக்களையும், எஞ்சியிருக்கும் நம் இருப்பையும் காத்துக்கொள்ள முயற்சிப்போம்.
நம் மக்களைத் தேடிச் செல்வோம். அவர்களின் கதைகளைக்கேட்போம் . அவர்களோடு நிற்போம்.


