03 பாகம் மூன்றின் பன்ரெண்டாவதுதொடர்

“செக்மேற்  02” நடவடிக்கை தொடர்பாக  நேரடியாகப் பங்குபற்றிய போராளி கிறிஸ்தோபர் குறிப்பிடுகையில் அடுத்து “செக்மேற் 02”   என்ற இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்து இரவோடு இரவாக நகர்ந்து வந்து செஞ்சோலை வெட்டையில் நிலையெடுத்தது  இந்திய இராணுவம். அதிகாலை   /01/3/1989  12.40ற்கு “செக் மேற்2” என்ற  பெரில்  சண்டையை ஆரம்பிப்பதே அவர்களின் திட்டமாகவிருந்தது. அன்றைய நாள் கிறிஸ்தோபர் ஆகிய நானும் அவர்களோடு இருந்தேன். அப்பொழுது கடுமையாக முடி வளர்ந்து இருந்த காரணத்தால் போராளி கைலி அவர்கள் மேஜர் கமல் அவர்களிற்கு முடி வெட்டினார்.

அப்பொழுது நான் கைலியண்ணைக்கு முடி வெட்டினேன்.  அப்பொழுது எங்களின் உதயபீட பாசறையில் 5 பேர் குளித்தால் தண்ணீர் வற்றிவிடும். அதனால் கைலி அண்ணை GPMG வைத்து இருந்தார். ஆனால் LMG வைத்து இருந்த அனைவருக்கும் கைத்துப்பாக்கியும் இருந்தது. அதனால் அவரின் GPMG யை அவரின் உதவி ஆளுனரிடம் கொடுத்து விட்டு அவர் தனது கைத் துப்பாக்கியை மட்டும் எடுத்துக்கொண்டு நானும் அவரும் செஞ்சோலை வெட்டைக்குக் குளிப்பதற்குச் செல்கின்றோம். அங்கே பெரிய கிணறும் இருந்தது. அதைவிட வெளி இடங்களை அவதானிப்பதற்காக ஓப்பி என்ற பேரில் (OP) ஆங்கிலத்தில்( Observation  Position)  மரங்களிற்கு மேலே பரன் அடித்து மேலே இருந்து 24 மணித்தியாலம் கண்காணிப்பது எமதுபோராளிகளின் கடமையாகயிருந்தது.

நாங்கள் சென்ற செஞ்சோலை வெளியில்  தொடர்ச்சியாக 7 போராளிகள் நிற்பார்கள். அதில் மேஜர் கமல் அண்ணையும் ஒருவர், அந்த முகாமில் அவர்தான் பொறுப்பாகவிருந்தார். அங்கே நிறையத் தண்ணீர் உள்ள கிணறும் அமைந்து  இருந்தது.  நானும்  கைலியண்ணையும் அங்கே சென்றதும் குளிப்பதற்கு வெளிக்கிடுகின்றோம் அவ்வேளை  12.40ற்கு  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தி மேஜர் கமல் அண்ணை கேட்டுக் கொண்டே இருக்கின்றார், அவ்வேளை ஓப்பிக்காரன் எக்களைக் கூப்பிடுகின்றான். ஏதோ இருட்டாகத் தெரியுது பாருங்கோ! என்று அவன் சொல்ல நானும் கைலியண்ணையும் போய்ப் பார்த்தோம் எருமைமாட்டுக்கூட்டம் போல் எங்கள் கண்ணிற்கு தெரிந்தது, நாங்கள் மேஐர் கமல் அண்ணையைக்  கூப்பிட்டு இதைக் காட்டியபோது அவர் இந்திய இராணுவம் என உறுதிப்படுத்தினார்.

அப்பொழுது நானும் கைலியண்ணையும் இருவரும் வேகமாக  ஓடிப்போய் உதயபீடம் சென்று அங்கே வைத்து இருந்த  GPMG யை எடுத்துக்கொண்டு செஞ்சோலை வெளிக்கு திரும்பவும் வேகமாக ஓடிவருகின்றோம்.   அதே நேரம் கமல் அண்ணை பொடியலையும் கூட்டிக்கொண்டு செஞ்சோலை வெளிக்குச் சென்று விட்டார். நாங்கள் வந்து கொண்டு இருக்கும்போதே அவர்கள் சண்டையை  இந்திய இராணுவத்திற்கு எதிராக ஆரம்பித்து விட்டார்கள்.  பெரிய வெடிச்சத்தம் ஒருபக்கம் ஆகாயப்பக்கம் பைற்றர் தாக்குதல் மறுபக்கம் பெரிய புகை மண்டலாமாக மாறியது எமது பாசறை .அப்பொழுது நாங்களும் வேகமாக ஓடிச் சென்று கமல் அண்ணையோடு சேர்ந்து சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றோம். கைலி அண்ணையும் இந்தியா இராணுவத்தை நோக்கி GPMG  துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுக் கொண்டேயிருக்கின்றார். 

சண்டை கடுமையாகத் தொடர்ந்து கொண்டே இருந்தது.  இவ்வேளை வயிற்றில் வெடிபட்டு கமல் அண்ணன் அந்த இடத்திலே வீரச்சாவு அடைந்து விட்டார்.
ஆனால் அவர் மதியம் சாப்பிட்ட உணவெல்லாம் வெளியே வந்து கிடந்தது பார்ப்பதற்கு மிகவும் கவலையாக இருந்தது. ஆனால் கடுமையான சண்டை நடந்து கொண்டேயிருந்தமையால் கமல் அண்ணையின் பொடியை எடுக்க முடியாத இறுக்கமான களச்சூழல்  எமக்கு ஏற்பட்டது. அப்பொழுது 50 கலிபர் கதாநாயகன் என தலைவரால் மதிக்கப்படுபவரும் சண்டையில்  மிகவும் திறமையும் அனுபவமும்  உள்ள மேஜர் குணா அண்ணை 50 கலிபரோடு வந்து இந்தியா இராணுவத்தை நோக்கி சரமாரியாகத் தாக்குதலை மேற்கொண்டார்.

வீரமரங்கள் முறிந்து விழுந்தன. பேய் அடிக்குது எனச் சொல்லி காயப்பட்ட சாவடைந்த  இந்திய இராணுவச் சிப்பாய்களை கைவிட்டு விட்டு தப்பி ஓடியது இந்திய இராணுவம்.அதன்பின் நாங்கள் சென்று மேஜர் கமல் அண்ணன்  உட்பட 3 போராளிகளின் பொடியை எடுத்து உதயபீடம் அனுப்பினோம்.  தொடர்ந்து நாங்கள் சண்டை நடந்த இடங்களைச் சோதனையிட்டோம்.  பல இந்திய இராணுவத்தின் பொடிகள் கிடந்து எடுத்தோம், ஒரு சிப்பாய் கால் முறிந்து பற்றைக்குள் கிடந்தான்.  எங்களைக் கண்டதும் பல்லை நறுக்கி ஏதோ சத்தமிட்டான்.   இதைப்  பார்த்த கைலியண்ணை எனது றைவுளை வேண்டி அவனைச் சுட்டுக்கொன்றார். அச்சண்டையில்தான் இந்திய இராணுவத்தின்  உயர் அதிகாரியான கேணல் பக்ஸ்சி அவர்களும் கொல்லப்பட்டார். 

அவரின் பொடியை எடுத்து ஒரு நாவல் மரத்திற்குக் கீழேபோட்டு நாங்கள் எரித்தோம்.  அச்சண்டை மிக வெற்றியாக முடிந்தது.  நாமும்  இந்தியாவில் மூன்றாவது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்த ஒரு பெரிய தளபதியான மேஜர் கமல் அண்ணையை நாம் இழந்தோம். அது எமது போராளிகள் மத்தியில் பெரும் கவலையாக இருந்தது.  இது இப்படி இருக்க பல சண்டைகள் பிடித்தும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க முடியாது என்று இந்தியா அரசாங்கம் புரிந்து கொண்டது .அதை விட எமது உறவுகளான இந்தியத் தமிழர்கள் மற்றும் இலங்கை அதிபர் பிரேமதாசா அனைவரும் இந்திய இராணுவத்தை வெளியே போகுமாறு சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இந்தியா இராணுவத்திற்கும் போர் நிறுத்தம் ஒன்று கொண்டு வந்து அது நடைமுறைக்கு வந்தது.

இந்திய இராணுவம் ஒப்பந்தம் போட்ட போதிலும் மாற்றுக் குழுக்கள் தமிழ் மக்கள் மீது தாக்கதல் நடத்திக் கொண்ட இருந்தார்கள்.

இந்நடவடிக்கையில் நேரடியாக பங்குபற்றிய போராளி கிறிஸ்தோபர் மேலும் குறிப்பிடுகையில்!   இந்திய இராணுவத்தால் உருவாக்கப்பட்ட திறிஸ்ரார் என்று அழைக்கப்படும் தமிழ்துணைக் குழுக்கள்  27/09/1989 அன்று முள்ளி வாய்க்காலில் திலீபன் நினைவு நாளைச் செய்வதற்கு மக்கள் சோடனை வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள். இதை பொறுக்க முடியாத தமிழ் ஒட்டுக்குழுக்கள் சோடனையில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போது ஒரு பொது மகன் அவ்விடத்திலே கொல்லப்பட்டார். ஏனையவர்கள் தப்பி ஓடியமையால் அந் நிகழ்வு மக்களால் செய்யப்படவில்லை. ஆனால் இவர்களிற்குப் பக்கத்தில் இருந்த இரண்டு இந்திய இராணுவ முகாம்களில் இருந்த இந்தியச்  சிப்பாய்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இத்துயரச் சம்பவத்தை அறிந்த தமிழீழத் தேசியத் தலைவர் உடனே கிட்டு அண்ணையைக் கூப்பிட்டு தளபதி சொர்ணம் தலைமையில் ஒரு கொமாண்டோ அணியைத் தயார் படுத்தி  அவர்கட்கு ஒரு 3 நாள் பயிற்சியை வழங்கி அவ்வணியை அனுப்பி அத்துணைப் படையினரின் முகாமை அழித்துவிடுமாறு  கட்டளை வழங்கினார்.

இதை ஏற்ற கேணல் கிட்டு அவர்கள் மூன்று நாள் பயிற்சியை வழங்கி கிட்டு அவர்கள் பிரிகேடியர் சொர்ணம் தலைமையில் 150 போராளிகளை அனுப்பி வைத்தார்.  அதில் “வண் 4″ல் இருந்து போனவர்களிற்கு முதலாவது பொறுப்பாக லெப். கேணல் அன்பு அவர்களும் இரண்டாவது பொறுப்பாக போராளி கிறிஸ்தோபர் ஆகிய நானும் வன்னி அணிக்கு தளபதி பால்ராஜ் அவர்கள் தலைமை தாங்கி வந்தார். நாங்கள் கால் நடையாகச் சென்று 10/10/1989, அன்று முள்ளியவளையில் உள்ள மாஞ்சோலைக்கு வந்து சேர்ந்தோம் அங்கே வைத்து தளபதி சொர்ணம் அண்ணையால் சண்டைக்கான திட்டம் போராளிகளிற்கு விளக்கப் படுத்தப்பட்டது. 

அதில் இந்திய இராணுவத்திடம் முதலில் தெரிவிப்பது நாங்கள் உங்களைத் தாக்கவில்லை தமிழ் துணைப்படையினரை மட்டும்தான் தாக்கப்போகின்றோம்  என தெரிவிப்பது,  இல்லை அவர்கள் எங்களைத் தாக்கினால் அவர்களையும் சேர்த்து தாக்குவது என திட்டம் தீட்டப்பட்டது.  தொடர்ந்து அன்று இரவு முள்ளிவாய்க்கால் துணைப் படையினரின் முகாம் விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டது,

திட்டமிட்டாப்போல் இந்தியா இராணுவத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, ஆனால் இந்திய இராணுவம் வீட்டிற்கு மேலே இருந்த பிளேட்ரில் நின்று விறன்LMG ஆல் சத்தவெடிவைத்தது, ஆனால் திட்டமிட்டாப்போல் சண்டை ஆரம்பம் ஆனது எட்டுதமிழ் துணைப் படையினர் அவ்விடத்திலே கொல்லப்பட்டார்கள். இரண்டு பேர் உயிரோடு பிடிபட்டனர். ஏணைய துணைப்படைபினர் தப்பி ஓடி விட்டனர். குறிப்பிட்ட ஆயுதத்தள பாடங்களும் சில அவர்களின் அல்பம் மற்றும் ஆவணங்களும் விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்டது,அதே நேரம் மாங்குளத்தில் அமைந்து இருந்த துணைப்படை முகாம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அனைவரும் தப்பிஓடி விட்டார்கள். அதில் இரண்டு போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள், அனைத்தும் வெற்றிகரமாக முடித்துவிட்டு மீண்டும் வன்னிக்குச் சென்றார்கள் விடுதலைப் புலிகள். இதேகாலப் பகுதியில்தான் புதிதாக ஒரு கட்டுப்பாடு தலைவரிடம் இருந்து எமக்கு வந்தது.,

மாற்றுக் குழுக்களிடம் இருந்து பல அல்பங்கள்  விடுதலைப்புலிகள் எடுத்தார்கள்  எனக் குறிப்பிட்டிருந்தேன். இந்த அல்பங்கள் தலைவரின் பார்வைக்காக  அனுப்பப்பட்டது. அதைப் பார்த்த  தலைவருக்குப்  பெரும் குழப்பமாகயிருந்தது. அப்படங்களில் இருந்த மாற்று இயக்கத் தோழர்களும் தாடியோடுதான் இருந்தார்கள், எக்கட போராளிகளும் தாடியோடுதான் இருக்கின்றார்கள். அவர்களிற்கும் எங்களிற்கும் வித்தியாசம் இல்லாமல் இருக்கின்றது.  அப்படி என்றால் மக்கள் எப்படி வித்தியாசம் காணமுடியும்? ஒரு விடுதலைப் போராளி என்றால் சுய ஒழுக்கம் கட்டுப்பாடு என்பதில் மக்களை விட உயர்ந்தவனாகவும் அவர்களிற்கு முன்மாதிரியானவனாகவும் இருக்க வேண்டும் என தலைவர் நினைத்தார். அதனால் அன்றில் இருந்து எவரும் தாடிவளர்க்க முடியாது எனவும் அனைவரையும் உடனே தாடிகளை எடுக்குமாறு தலைவரால் கட்டளை வழங்கப்பட்டது.

 ,அனைத்துப் போராளிகளையும் தாடியை  எடுக்குமாறு தலைவர் கட்டளை!

அன்றைய  நாள் தலைவரின் பாதுகாப்பில் இருந்த புனித பூமி முகாமில் இருந்த அனைத்துப் போராளிகளுக்கும் விக்றேசர் வழங்கப்பட்டது . அன்றில் இருந்து ஒரு போராளிக்கு மாத பஜ்ஜேட் என்ற பேரில், 2 குழியல் சோப் இரண்டு உடைதோய்க்கும் சோப் இரண்டு சம்போ ஒரு பற்பசை மாதம் ஒரு பால்மா பக்கேட், ஒரு விக்றேசர் என இறுதி போராட்டம் மௌனிக்கும்  2009 /05/17 வரை தனி நபர் பராமரிப்புப் பொருள் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் வழங்கி வந்தார்கள்.இதே காலப்  பகுதியில்தான் தலைவரின் மேற்பாதுகாப்பு அணியில் மிகவும் திறமையான போராளியான  கரும்புலி மேஜர் காந்தரூபன் தலைமையில் திருமலையை அண்மித்த அக்கர வெளிக்கு ஒருஅணி  சென்றது.  அங்கு இருந்துவரும் திருமலைப் போராளிகளைக் கூட்டிக் கொண்டு  வரவே அவ்அணி சென்றது.

அவ்வேளை ஒரு கரடி இரண்டு குட்டிகளோடு வந்துகொண்டேயிருந்தது……  போராளிகளைக் கண்டதும் அக்கரடி திடீரேன ஒரு போராளியின் தலையைக் கடிக்கப் பாய்ந்தது. பதட்டம் இல்லாத காந்தரூபன் அப் போராளிக்கு சூடு படாதவாறு குறிபார்த்து அக்கரடியின் தலையில் சுட்டு அதை விழுத்தினான்.அவனின் திறமையால் அப் போராளி காப்பாற்றப் பட்டான்.  அது மட்டுமல்ல அக்கரடியைக்  காவிக்கொண்டு புனித பூமிக்குக் கொண்டுவந்து ஆண் பெண் போராளிகளின் பார்வைக்காக அதை வைத்தான்.  அதைத் தலைவரும் பார்வையிட்டு காந்தரூபனைப் பாராட்டினார். 

இந்த வீரன் இறுதியாக 10/07/1990 அன்று  கரும் புலியாகச்சென்று தனது போராட்ட வாழ்வை முடித்துக் கொண்டான்.இதே ஆண்டுதான் அனைத்து விடுதலைப்புலி உறுப்பினர்களிற்கும் வரிப்புலிச் சீருடை வழங்கப்பட்டது, ஆரம்பத்தில் வந்த வரிப்புலி கனம்கூடிய கெம்பேஸ் துணியில் கலர் கொடுக்கப்பட்டு இருந்தது பின் அதற்கு அடுத்தபடி பொலிஸ்ற்றர் துணியில் கலர் கொடுக்கப்பட்டு இந்தியவில் இருந்து வரிப்புலி சீருடை வந்தது, அதை திருகோணமலையைச் சேர்ந்த ஜோஜ்ஐயா மேலும் பலர் தைத்து அனைத்துப் போராளிகளிற்கும் வழங்கப்பட்டது, அன்றில் இருந்து வரிப்புலியோடு போராளிகள் அழகாகக் காணப்பட்டார்கள்

இதுதான் கிட்டு அண்ணையின் கடைசி நடவடிக்கையாகவும், கடைசி திட்டமிடலாகவும் இருந்தது.

1989 /10ஆம் மாதம் அப்பொழுது பிரேமதாசா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் பேச்சுவார்த்தை நடந்தமையால் அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கிட்டு அவர்களை அவர்களின் ஹெலியில் ஏற்றி கொழும்பிற்கு எடுத்து மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாடு அனுப்புமாறு இலங்கை அதிபர் பிரமதாசாவிடம் விடுதலைப் புலிகள் கேட்டார்கள். 

அதற்கு அவர்களும் ஏற்றுக் கொண்டமையால் புனிதபூமியில் இருந்து 4 போராளிகள் ஸ்ரச்சரில் கேணல் கிட்டு அவர்களைக் காவிக்கொண்டு செல்ல 20 திற்கு மேற்பட்ட போராளிகள் முன்னாலும் பின்னாலும் பாதுகாப்பு வழங்கிக் கொண்டு சென்றார்கள்.  அவர்கள் வசந்த நாடு என்ற முகாமிற்குச் சென்றதும் அங்கே அவரை இறக்கி வைத்தார்கள். சிறிது நேரத்தில் இலங்கை அரசுக்குச் சொந்தமான உலங்கு வானூர்தி வந்து இறங்கியது. தலைவரையும், போராளிகளையும் தான் பிரிவதை எண்ணிக் கிட்டு அண்ணை அழத் தொடங்கிவிட்டார், அழ வேண்டாம் என போராளிகள் சொல்லியும் கிட்டு அண்ணை அழுதிக்கொண்டே ஹெலி நூறுமீற்றர் பறந்து செல்லும் வரை ஹெலியில் இருந்தவாறு போராளிகளைப் பார்த்து கையைக்  காட்டிக்கொண்டே சென்றார்.

அதுதான் அவரின் கடசிப்பயணமாக இருந்தது. அவருக்கு என்ன நடந்தது என்று பிறகு பார்ப்போம்.இதே காலப் பகுதியில்தான் விடுதலைப்புகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும், அவரின் மனைவியார் அடல் அவர்களும் கொழும்பில்  பிரேமதாசா குழுவோடு பேச்சுவார்த்தை முடிந்தவுடன் இருவரும் இலங்கைப் படையின் உலங்கு வானூர்தியில் தலைவரைச் சந்தித்துக் கதைப்பதற்கு வசந்த நாட்டில் வந்து இறங்கி புனித பூமிக்கு வந்தார்கள். அங்கே வந்ததும் போராளி சக்குறு அவர்களிடம் பாலா அண்ணை உனது பேர் என்ன எனக் கேட்டார். அதற்கு சக்குறு தனது சொந்தப்பேரை அவர்கட்குச்சொன்னார். அதைப்  பார்துக் கொண்டேயிருந்த தேசியத் தலைவர் இயக்கப் பெயர் இருக்கும் போது ஏன் சொந்தப் பேரைச் சொன்னாய்? என கேட்டு அவருக்குத் தண்டனையாக 10 கிலோ மீட்டர் ஓடுமாறு கட்டளை வழங்கினார்.

சிறு சிறு பிழைகளைக் கண்டாலும் உடனே அதைத்திருத்த வேண்டும் என்பதே தலைவரின் குறிக்கோளாயிருந்தது. சக்குறுவிற்கு என்ன நடந்தது? என்று பிறகு பார்ப்போம். அடல் பற்றி நாம் பார்ப்போமானால்1978  ல் இருந்து எமது அமைப்பில் செயல்பட ஆரம்பித்த பெண் என்றாலும்சரி , பெண் போராளி என்றாலும் சரி தமிழிழீ விடுதலைப் புலிகளில் பெண்கள் இணைவதற்கும் அவர்கள் துணிந்து வருவதற்கும் அவரே முதன்மை வழிகாட்டியாக நின்று கடமையாற்றினார். அது மட்டுமல்ல விடுதலைப் புலிகளின் தலைவரே தொடர்ந்து தலைவராகயிருக்க வேண்டும் என்பதில் இறுதிவரை ஒரே நிலைப்பாட்டில் இருந்தவர்.

ஸ்ரேவேலின் விடுதலை போராட்டத்தில் அமெரிக்கா பெண்மணியான கிற்றிபிறமேன்ட் அவர்கள் ஒரு மருத்துவம் போராளியாகவும் அவ்அமைப்பின் தலைவர்களில் ஒருத்தரான “மோசா தயான்” அவர்கட்கு ஆலோசகராகவும் இருந்து அவ்விடுதலையை வென்று எடுத்தாரென அவர்களின் வராலாற்றுப் புத்தகமான தாயம் நோக்கிய பயணம் என்ற புத்தகத்தில எழுதியுள்ளார்கள். அதேபோன்று தமிழர்களின் விடுதலைப் போரில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணான அடல் அவர்களின் செயல்பாடு மிக முக்கியமானது. அவர் அமைப்பின் தலைவரோடு நெருக்கமாகயிருந்து  தனது ஆலோசனையை வழங்கியது மட்டுமன்றி, எமது பெண் போராளிகள் பற்றி சில கொழும்பில் வாழும் சிங்களவர்களிற்கு சார்பான தமிழ் பெண்கள் எமது பெண் போராளிகளைப் பற்றி அவர்கள் தவறானவர்கள் என்று ஆங்கில வடிவில் எழுதிய கட்டுரையை அடல்பார்த்தவுடன் எங்களின் பெண் போராளிகள் மிகவும் ஒழுக்கமானவர்கள், அவர்கள் எந்த நேரத்திலும் பாலியல் ரீதியான பிரச்சனையில் ஈடுபடமாட்டார்கள் என்று ஆங்கில வடிவில் ஒரு கட்டுரையை எழுதி அதை முறியடித்த பெருமையும் அவரைத்தான் சாரும்

 அடல் தனது உயிரை எண்ணிப் பயந்து வாழ்ந்தவர் அல்ல

அதற்கு பல உதாரணங்களைக் குறிப்பிடலாம்! விடுதலைப்புலிகளின் வரிப்புலிச்சீருடையை விரும்பிப்போட்ட முதல் வெளிநாட்டுப் பெண்மணியும் அவரே ஆவார்,அத்துடன் விடுதலைப் புலிகளின் சைனட்டையும் அவர் அணிந்து கொண்டார். பெண் போராளிகளில் ஒரு மூத்த போராளியாக அவர் வலம்வந்தார்.அது மட்டும் அல்ல ஆபத்தான கடல் பயணம் எனத்  தெரிந்தும் பாலா அண்ணைக்கு வருத்தம் ஏற்பட்டபோது அவரோடு சேர்ந்து கடல்ஊடாக இங்கிலாந்திற்குச் சென்றதும் அவரே என்பது குறிப்பிடத்தக்கது.அவுஸ்திரேலியா நாடும் அந்த மண்ணில் பிறந்த அடலும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் அளப்பெரிய கடமை செய்துள்ளார்கள் என்பதை தமிழர்கள் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

2009 தமிழர்கள் சிங்களவர்களால் இனப்படுகொலை செய்யப்பட்ட போது சிறுபாண்மை தமிழர்களிற்கு புகலிடம் வழங்கலாம் என அவுஸ்திரேலியாப் பிரதமர் திருமதி யூலிய அவர்கள் 2012 அன்று அறிவித்தார். தமிழர்களை வரச்சொல்லி அறிவித்த முதலாவது நாடு என்ற பெருமையை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அதில் இருந்து நூற்றுக் கணக்கான படகுகள் அவுஸ்திரேலியா நோக்கி வந்தது.அதில் கனிசமான தமிழர்களிற்கு அவுஸ்திரேலியா நிரந்தரக்குடியுருமை வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது

அடுத்து தேசிய மாவீரர் நாள் எப்படி உருவானது என்பதை விரிவாகப்பார்ப்போம்

தொடரும் அன்புடன் ஈழமதி

Share:

1 thought on “b 127 பாகம் 03 தமிழிழீழக்கதை       (Tamil Eelam of story)  தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு “”

Leave a reply to temlnews_writer Cancel reply

Your email address will not be published. Required fields are marked *