ஈரான் மீதான போருக்கு எதிராக அமெரிக்க மக்களிடையே அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் போலியானவை என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய அவர், இந்தப் போருக்கு 32 சதவீத மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவிப்பதாகக் கூறப்படும் புள்ளிவிவரங்கள் தவறானவை என்றும், கேள்வி கேட்கும் முறையிலேயே பாரபட்சம் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேவேளை, ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க வேண்டுமா என்ற அடிப்படையில் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டால் முடிவு வேறாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானுக்கு எதிரான போர்

சமீபத்தில் வெளியிட்ட கணிப்பில், 36 சதவீத அமெரிக்கர்களே ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஆதரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த பின்னணியில் ட்ரம்பின் இந்த விமர்சனம் வந்துள்ளது.

அத்தோடு, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கவும், நிரந்தர போர்நிறுத்தத்தைக் கொண்டு வரவும் தனது அரசு எடுத்து வரும் முயற்சிகளில் விமர்சகர்கள் அவசரம் காட்டக்கூடாது என்று ட்ரம்ப் கேட்டுக் கொண்டுள்ளா

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments